இலவச, கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 1,20,989 பேர் விண்ணப்பம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, May 20, 2019

இலவச, கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 1,20,989 பேர் விண்ணப்பம்

தமிழகத்தில் இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.


இச்சட்டத்தின் கீழ், சமூக, பொருளாதார ரீதியாக நலிவடைந்த குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் தனியார் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரை  இலவசமாக கல்வி பயில்வதற்கான கட்டணங்களை மத்திய, மாநில அரசுகள் ஏற்கின்றன. தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு இடங்கள் இதற்காக ஒதுக்கப்படுகின்றன.


இதன்படி இந்த ஆண்டு ஒரு லட்சத்து 21 ஆயிரம் இடங்களுக்கு, 1 லட்சத்து 20 ஆயிரத்து 989 பேர் விண்ணப்பித்துள்ளதாக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.


இதுவரை நேரடியாக மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில், இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தி மாணவர்களை சேர்க்க அரசு திட்டமிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment