சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககத்தின் 2019-20ம் கல்வியாண்டிற்கான விண்ணப்பம் மற்றும் கையேடு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. துணைவேந்தர் பேராசிரியர் முருகேசன் முதல் விண்ணப்பத்தை வழங்கி தொடங்கி வைத்தார். இதில் பல்கலைக்கழக பதிவாளர் கிருஷ்ணமோகன், தொலைதூர கல்வி இயக்ககத்தின் இயக்குநர் அருள் மற்றும் புல முதல்வர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் துணைவேந்தர் முருகேசன் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகம் 90வது ஆண்டு விழாவை காண்கிறது. இந்தியாவிலேயே அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தான் முதன் முதலில் தொலைதூர கல்வி இயக்ககம் தொடங்கப்பட்டது.
கல்லூரி செல்ல முடியாதவர்களுக்காக தொடங்கப்பட்டு தற்போது 40வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது.
உயர்கல்வியில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது தொலைதூர கல்வி இயக்ககம். தற்போது 268 படிப்புகள் தொலைதூர கல்வி இயக்ககத்தில் உள்ளது. மாணவர்கள் அதிகம் சேராத 53 பாடங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
எம்எஸ்சி யோகா உள்ளிட்ட 8 புதிய படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. தொலைதூர கல்வி இயக்ககத்தில் மாணவர்கள் புகார்களை தெரிவிக்க தனியாக இ-மெயில் ஐடி உருவாக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தெரிவிக்கும் புகார்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த கல்வியாண்டில் தொலைதூர கல்வி இயக்ககத்தில் 1 லட்சத்து 25 ஆயிரம் மாணவர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்

No comments:
Post a Comment