தமிழகத்தில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் உள்ள படிப்புகளுக்கு நேற்று வரை 8,756 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
கால்நடை மருத்துவம், பி.டெக் புட் டெக்னாலஜி, பி.டெக் பவுல்டிரி டெக்னாலஜி, பி.டெக் டெய்ரி டெக்னாலஜி படிப்புகளுக்கு 7 கல்லூரிகளில் உள்ள 460 இடங்களுக்கு மே 8ம் தேதி முதல் www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கால்நடை மருத்துவ படிப்புக்கு 7,488 பேரும், 3 பி.டெக் படிப்புகளுக்கு 1,268 ேபரும் நேற்று வரை விண்ணப்பித்துள்ளனர். ஜூன் 10ம் தேதி வரை மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஜூன் 10ம் தேதிக்குள் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பித்த மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 24ம் தேதி தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படுகிறது.
மொத்தமுள்ள 460 இடங்களில் 15 சதவீத இடங்களை மத்திய கால்நடை மருத்துவ கவுன்சில், கவுன்சலிங் மூலம் நிரப்பி வருகிறது.
பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் மீதமுள்ள 85 சதவீத இடங்களுக்கு(391 இடங்கள்) கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் கவுன்சலிங் மூலம் நிரப்பி வருகிறது. இந்த இடங்களுக்கான கவுன்சலிங் ஜூலை 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment