25 வயதில் மக்களவை எம்.பி...... தடைகளை தகர்த்தெறிந்து சாதனை படைத்த பழங்குடியின பெண் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, May 27, 2019

25 வயதில் மக்களவை எம்.பி...... தடைகளை தகர்த்தெறிந்து சாதனை படைத்த பழங்குடியின பெண்

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 78 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்று எம்.பிக்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒடிசாவின் புவனேஸ்வரை சேர்ந்த 25 வயதே ஆன பழங்குடியின இளம்பெண் சந்திராணி முர்மு மக்களவை உறுப்பினராக தேர்வாகியுள்ளார்.


 ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், வறுமையில் வாடும் மக்களுக்காகவும் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற தனது தந்தை சஞ்சீவுடன் இணைந்து பல்வேறு சமூக சேவைகளை சந்திராணி செய்து வருகிறார்.


 ஒடிசாவில் தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள கியோஞ்சர் மக்களவை தொகுதியில் பிஜூ ஜனதா தளம் கட்சி சார்பில் சந்திராணி போட்டியிட்டார்.

இவருக்கு போட்டியாக பாஜக வேட்பாளர் ஆனந்த் நாயக் களம் கண்டார். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. மேலும், கியோஞ்சர் தொகுதியை கைப்பற்றுவதற்காக பாஜகவினர் யுக்திகளை கையாண்டனர்.


ஆனால், சந்திராணியின் பிரசாரமும், சமுதாயத்தின் மீது அவருக்கு இருந்த அக்கறையும் பாஜகவின் வியூகங்களை தகர்த்தெறிந்தது. இதன் பயனாக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சந்திராணி வெற்றியும் பெற்றுள்ளார்.


இதன்மூலம் மிகவும் இளம் வயது எம்.பி. என்ற பெருமையையும் சந்திராணி பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment