தொலைநிலைக் கல்வி நிறுவனத் தேர்வு தேதி மாற்றம்: விண்ணப்பிக்க 2 நாள்கள் கூடுதல் அவகாசம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, May 27, 2019

தொலைநிலைக் கல்வி நிறுவனத் தேர்வு தேதி மாற்றம்: விண்ணப்பிக்க 2 நாள்கள் கூடுதல் அவகாசம்

சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத் தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:


ஜூன் 1-ஆம் தேதி தொடங்க இருந்த தொலைநிலைக் கல்வி நிறுவன இளநிலை, முதுநிலை, பட்டயப் படிப்புகளுக்கான 2019 ஜூன் மாதத் தேர்வுகள், ஜூன் 15-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன. மாற்றப்பட்ட புதிய தேர்வு கால அட்டவணை பல்கலைக்கழக இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும்.


அதுபோல, இந்தத் தேர்வுக்கு இதுவரை விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு கூடுதலாக இரண்டு நாள்கள் கால அவகாசம் அளிக்கப்படுகிறது.


இவர்கள் செவ்வாய், புதன் ஆகிய இரு தினங்களில் அபராதத் தொகையுடன் தேர்வுக் கட்டணத்தை செலுத்தி விண்ணப்பப் பதிவைச் செய்யலாம் எனவும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment