தீ விபத்தில் உயிரிழந்த 3 மாணவிகள் பிளஸ் 2வில் தேர்ச்சி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, May 25, 2019

தீ விபத்தில் உயிரிழந்த 3 மாணவிகள் பிளஸ் 2வில் தேர்ச்சி

குஜராத்தின் சூரத் நகரில், காம்ப்ளக்ஸ் ஒன்றின் 4வது மாடியில் செயல்பட்டு வந்த கோச்சிங் சென்டரில் நேற்று முன்தினம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதில் 20 மாணவ, மாணவிகள் தீயில் கருகி பலியாயினர். தீ விபத்தின்போது  கட்டிடத்தின் 4வது மாடியில் இருந்து மாணவர்கள் கீழே குதிக்கும் காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

 இந்த கோச்சிங் சென்டரில் பயின்று வந்த மாணவ, மாணவிகளில், 3 பேர் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். குஜராத் உயர்நிலை  பள்ளித் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

இதில் தீ விபத்தில் உயிரிழந்த யாஷ்வி கேவாடியா, மான்சி வர்ஷினி மற்றும் ஹஸ்தி சுரானி ஆகிய 3 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 இதற்கிடையே, தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்  எண்ணிக்கை நேற்று 22 ஆக உயர்ந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கோச்சிங் சென்டர் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment