அரசியல் கட்சிகளுக்கென நிலையான வாக்கு வங்கி உள்ளதா என்பது குறித்த உண்மையை 2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள் அம்பலப்படுத்தியுள்ளன.
ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் தங்களுக்கு இவ்வளவு வாக்கு வங்கி இருப்பதாகக் கூறி பிரதான கட்சிகளுடன் பேரம்பேசுவதை பல கட்சிகள் வாடிக்கையாகக் கொண்டுள்ளன.
ஒரே நேரத்தில் பல கட்சிகளுடன் இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தும் போக்கும் அரங்கேறும். ஆனால் வாக்கு வங்கி என ஒன்றில்லை.
நடுநிலை வாக்காளர்களே வெற்றி, தோல்வியை தீர்மானிக்கின்றனர். கட்சியின் நிலைப்பாடு ஏற்புடையதாக இல்லை என்றால் தொண்டர்களே மாற்றி வாக்களிக்க தயங்க மாட்டார்கள் என்ற உண்மையை, 2019 மக்களவை தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்தியுள்ளன
ஒன்றரை கோடி தொண்டர் கள் தங்கள் பக்கம் இருப்பதாக அதிமுகவும் அமமுகவும் பரஸ்பரம் கூறி வருகின்றன.
ஆனால் 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அனைத்தும் சேர்த்தே 1 கோடியே 28 லட்சம் வாக்குகளைத்தான் பெற்றன.
வடசென்னையில் கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் கூட்டணி இல்லாமல் அதிமுக வேட்பாளர் 4,06,704 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார்.
பாஜக, பாமக, மதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக வேட்பாளர் 86,989 வாக்குகளும் தனித்து களம் கண்ட காங்கிரஸ் 24,190 வாக்குகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 23,751 வாக்குகளையும் பெற்றன.
உண்மையில் வாக்கு வங்கி என ஒன்று இருந்திருந்தால், நடந்து முடிந்த தேர்தலில் வடசென்னையில் அதிமுக, பாஜக, பாமக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக வேட்பாளர் 4.90 லட்சம் வாக்குகளை பெற்றிருக்க வேண்டும்.
ஆனால் அவர் 1,29,468 வாக்குகளைத்தான் பெற முடிந்தது. கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் வடசென்னையில் திமுகவேட்பாளர் தனித்து 3,07,000 வாக்குகளைப் பெற்றார்.
இந்தத் தேர்தலில்கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளையும் சேர்த்தால் தோராயமாக 3.55 லட்சம் வாக்குகளைத்தான் பெற்றிருக்க வேண்டும். ஆனால் 5.90 லட்சம் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
அணி மாறிய வாக்குகள்
இதன்மூலம் 3.60 லட்சம் வாக்குகள் அணி மாறியது தெளிவாகி இருக்கிறது.
அதாவது திமுகவுக்கு 2.30 லட்சம் பேரும் மீதம் உள்ள 1.30 லட்சம் பேரின் வாக்குகள் மக்கள் நீதி மய்யம் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவற்றுக்கு பிரிந்திருக்கிறது.
எனவே இத்தொகுதியில் 3.60 லட்சம் நடுநிலை வாக்காளர் இருப்பதைக் கணிக்க முடியும்.
இதேபோல், காஞ்சிபுரம் தொகுதியில் கடந்த 2014 தேர்தலுடன் ஒப்பிடும்போது அதிமுக வேட்பாளர் 5 லட்சத்துக்கு மேல் வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். ஆனால் 3.96 லட்சம் வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.
தருமபுரி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமக 4,68,194 வாக்குகளையும் தனித்து போட்டியிட்ட அதிமுக 3,91,048 வாக்குகளையும் பெற்றது.
தற்போதைய தேர்தலில் இவ்விரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில், வாக்கு வங்கி என்ற கணக்கின்படி, பாமக வேட்பாளர் குறைந்தபட்சம் 8.59 லட்சம் வாக்குகளை பெற்றிருக்க வேண்டும்.
ஆனால் 5,04,235 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இதில் சுமார் 3.50 லட்சம் பேர் நடுநிலை வாக்காளர்களாக மாறி, திமுகவுக்கு வாக்களித்துள்ளனர்.
அதனால்தான் கடந்த தேர்தலில் அங்கு 1.80 லட்சம் வாக்குகளை பெற்ற திமுக, இந்த முறை 5.47 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளது.
நடுநிலை வாக்காளர்கள்
2019 மக்களவைத் தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது, அரசியல் கட்சிகள் தங்களுக்கு உள்ள வாக்கு வங்கி குறித்து கூறி வரும் புள்ளி விவரத்தில் உண்மை இல்லை என்பதும் நடுநிலை வாக்காளர்கள் உயிர்ப்புடன் இருப்பதும் கட்சிகளின் செயல்பாடுகள், அவை செயல்படுத்தும் மக்கள் நல திட்டங்கள், அவை எடுக்கும் கூட்டணி முடிவுகள் உள்ளிட்டவற்றை கவனித்து,அதற்கேற்றவாறு வாக்களித்துள்ளனர்.
அதிமுகவுக்கு மாற்று திமுக என இருந்து வந்த நிலையில், இந்தத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகளுக்கு கணிசமான வாக்குகள் கிடைத் திருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment