புதிய கல்வியாண்டுக்கு விண்ணப்ப விநியோகம் துவக்கம் சட்ட கல்வி மீதான ஆர்வம் 3 ஆண்டில் 3 மடங்கு உயர்வு: பிளஸ் 2 முடித்தவர்கள் குவிந்தனர் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, May 16, 2019

புதிய கல்வியாண்டுக்கு விண்ணப்ப விநியோகம் துவக்கம் சட்ட கல்வி மீதான ஆர்வம் 3 ஆண்டில் 3 மடங்கு உயர்வு: பிளஸ் 2 முடித்தவர்கள் குவிந்தனர்

சட்டகல்வி பயிலும் ஆர்வம் பிளஸ்2 முடித்த மாணவர்கள் மத்தியில் 3 மடங்கு அதிகரித்துள்ளது.


 தமிழகம்   முழுவதும் டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சட்டக்கல்லூரிகளில் 2019-20ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் நேற்று தொடங்கியது. அரசுக்கல்லூரிகளில் நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பங்கள் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.


 இதையடுத்து நேற்று காலை 11 மணி முதல் மாணவ மாணவிகள் விண்ணப்பங்களை பெற ஆர்வம் காட்டினர். முதற்கட்டமாக பிஏ எல்எல்பி., 5 ஆண்டு சட்ட பட்டப்படிப்பிற்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இதற்கு பிளஸ் 2 தேர்ச்சி தகுதி என்பதால் பிளஸ்2 முடித்த மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பிக்க குவிந்தனர்.


  நெல்லை அரசு   சட்டக்கல்லூரியில் பிஏ. எல்எல்பி 5 ஆண்டு பட்டபடிப்பிற்கான விண்ணப்ப   விநியோகத்தை கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன், மாணவர்களுக்கு   வழங்கி துவக்கி வைத்தார். வரும் 21ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள்   வழங்கல் மற்றும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பெறுதல் நடைபெறும் என   அறிவிக்கப்பட்டுள்ளது.


 நெல்லையில் முதல்நாளான நேற்று த மாணவ, மாணவிகள், விண்ணப்பத்திற்கான கட்டணத்தை   வங்கி செல்லானாக செலுத்தி பெற்றுச் சென்றனர். ஆன்லைனிலும் பலர் விண்ணப்பித்து வருகின்றனர்.


சட்டக்கல்வி குறித்து நெல்லை சட்டக்கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:

 சட்டக்கல்விக்கான ஆர்வம் கடந்த 3 ஆண்டுகளாக இருக்கிற இடங்களுக்கு மேல் 3 மடங்கு அதிகரித்து வருகின்றன. 5 ஆண்டு படிப்பான பிஏ எல்எல்பி படிப்பிற்கு நெல்லையில் 160 இடங்களும், தமிழக அளவில் ஆயிரத்து 200 இடங்களும் உள்ளன.


 இதுபோல் 3 ஆண்டு படிப்பான எல்எல்பி பயில நெல்லையில் 200 இடங்களும் தமிழக அளவில் ஆயிரத்து 600 இடங்களும் உள்ளன. தற்போது முதற்கட்டமாக 5 ஆண்டு படிப்பிற்கு மட்டும் விண்ணப்பம் வழங்கப்படுகின்றன.


 பொதுப்பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.500ம் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250ம் ஆகும். இந்த கட்டணத்தை இந்தியன் வங்கி கிளையில் செலுத்தி செல்லானை இணைக்க வேண்டும். எஸ்சி எஸ்டி பிரிவினர் அதற்கான சான்று நகலை இணைக்கவேண்டும்.


 மாணவர்கள் விண்ணப்பம் முடிந்த பிறகு விண்ணப்பித்தவர்களின் மதிப்பெண் உள்ளிட்டவைகளை கணக்கிட்டு கலந்தாய்வு அடிப்படையில் இடங்கள் நிரப்பப்படும்.


3 ஆண்டு எல்எல்பி பட்ட படிப்பிற்கு வருகிற 28.6.2019 முதல் 26.7.2019 வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.


இதுகுறித்த மேலும் விபரங்களை http://www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றார்.

No comments:

Post a Comment