தமிழகத்தின் நான்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு புதிய முதல்வர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அப்பொறுப்புகளை தற்போது வகித்து வருபவர்கள் அடுத்தடுத்து ஓய்வு பெறவுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இப்போது 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
கரூரில் புதிதாகத் தொடங்கப்படவுள்ள கல்லூரியுடன் சேர்த்து அந்த எண்ணிக்கை நிகழாண்டில் 24-ஆக அதிகரிக்க உள்ளது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பொன்னம்பல நமச்சிவாயம் வெள்ளிக்கிழமையுடன் பணி ஓய்வு பெற்றார்.
அவரைத் தொடர்ந்து, கோவை இ.எஸ்.ஐ., பெரம்பலூர், கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர்களும் இந்த மாதத்தில் ஓய்வு பெறவுள்ளனர்.
இதனால், அந்த நான்கு இடங்களும் காலியாகவுள்ளன.
இதையடுத்து, அப்பொறுப்புகளுக்கு புதிய நபர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கான தேர்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து, மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோ கூறுகையில், பணி மூப்பு மற்றும் தகுதி அடிப்படையில் புதிய முதல்வர்களுக்கான பரிந்துரைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது; விரைவில் புதிய முதல்வர்களை அரசு நியமிக்கும் என்றார்.

No comments:
Post a Comment