தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் வறண்டு வருவதால் எங்கு பார்த்தாலும் தண்ணீர் இன்றி மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயத்துக்கு தண்ணீர் இல்லை என்ற நிலை மாறி குடிப்பதற்கே தண்ணீர் இல்லை என்ற மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வரும் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. கடும் வறட்சியான நேரத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று பெற்றோர், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால், புதிய பாடத்திட்டத்தின்படி உரிய காலத்தில் பாடங்களை நடத்தி முடிக்க வேண்டியுள்ளதால் விரைவாக பள்ளிகளை திறந்து பாடங்களை நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவிக்கிறது.
மேலும், அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க தனியாரையும், முன்னாள் பள்ளி மாணவர்களுக்கும் அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதில் குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவையும் அடங்கியுள்ளது. கழிப்பிடங்கள் போதிய அளவில் இல்லாத நிலையில், கழிப்பிடம் இருக்கும் சில பள்ளிகளில் தண்ணீர் வசதியும் இல்லை.
இதுபோன்ற சூழலில் தற்போது வறட்சியும் சேர்ந்துள்ளதால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் எப்படி இதை எதிர்கொள்வார்கள் என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
எனவே பள்ளிகளை திறப்பதை ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் இரா.தாஸ் கூறியதாவது: தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது.
அதில் நாங்கள் சில தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளோம்.
குறிப்பாக இந்த ஆண்டுக்கான பதவி உயர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் பதவி உயர்வு வழங்க வேண்டும். தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி பள்ளிகளுக்கு அனுப்புவதை ரத்து செய்ய வேண்டும்.
மாணவர்கள் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளாமல் மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் பணி நிரவலை தவிர்க்க வேண்டும். கடந்த ஆண்டு தென் மாவட்ட ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் வழங்கப்படவில்லை.
இந்த ஆண்டு வழங்க வேண்டும். வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் வழங்கும்போது, 70 சதவீதம் பதவி உய்வு மூலமும், 30 சதவீதம் நேரடி நியமனம் மூலமும் வழங்க வேண்டும்.
தொடக்க கல்வித்துறையை படிப்படியாக மூடும் நிலையை அரசு கைவிட்டுவிட்டு தொடக்க கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளுடன் முக்கியமான கோரிக்கையாக தற்போது உள்ள வெயில் மற்றும் வறட்சி நிலையை அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். ஊடகங்களில் காலி குடங்களுடன் பெண்கள் குடிநீர் கேட்டு போராடும் நிலையை பார்க்க முடிகிறது.
சென்னையிலும் அந்த நிலை உள்ளது. பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுவதை பார்க்க முடிகிறது.
இந்த நேரத்தில் பள்ளிகள் திறந்தால், பள்ளிக்குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். வெயில் காரணமாக உடல் நலமும் பாதிக்கப்படும். இதை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பதை ஒத்தி வைக்க வேண்டும்.
மேற்கண்ட எங்கள் கோரிக்கை அனைத்தும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், முதன்மைச் செயலாளரிடம் நேரில் சந்தித்து கொடுக்க இருக்கிறோம். அரசு இதை பரிசீலித்து பள்ளி திறக்கும் நாளை ஒத்தி வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு இரா.தாஸ் தெரிவித்தார்.

No comments:
Post a Comment