முதல் இடத்திலிருந்து 88 ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்ட சுந்தர் பிச்சை.! காரணம் இதுதான்.! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, May 21, 2019

முதல் இடத்திலிருந்து 88 ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்ட சுந்தர் பிச்சை.! காரணம் இதுதான்.!

googles sundar pichai drops no 88 reputation institute ceo study.

ரெப்புட்டேஷன் இன்ஸ்டிடியூட் நடத்திய இந்த வருடத்திற்கான சிறந்த சிஇஓ ரெப்டிராக் ஆய்வின் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை 88 ஆம் இடத்திற்குத்
 தள்ளப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


கடந்த ஆண்டு நடத்தப்பட்ட இதே சிறந்த சிஇஓ ரெப்டிராக் ஆய்வில், சுந்தர் பிச்சை முதல் இடம் பிடித்து சாதனை படைத்தார்.

 உலகத்தில் உள்ள அனைத்து முன்னணி நிறுவனங்களின் சிஇஓகளுக்கு இடையில் நடத்தப்பட்ட ஆய்வில் அவர் முதல் இடம் பிடித்து இந்தியர்களை பெருமிதம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு முதல் இடத்தில் ஷெல் நிறுவனத்தின் சிஇஓ, பென் வான் பர்டன் கைப்பற்றியுள்ளார். அவரை தொடர்ந்து லீகோ நிறுவனத்தின் சிஇஓ, நீல்ஸ் கிறிஸ்டென்சன் இடம் பிடித்துள்ளார்

ஜெஃப் பெஸோஸ் & மார்க் ஜுக்கர்பெர்க்

அதேபோல் கடந்த ஆண்டில் முன்னணி இடத்தை பிடித்திருந்த தொழில்நுட்பம் சார்ந்த சிஇஓக்கள் அனைவரும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. அமேசான் நிறுவனத்தின் சிஇஓ, ஜெஃப் பெஸோஸ் மற்றும் பேஸ்புக் நிறுவனத்தின் சிஇஓ, மார்க் ஜுக்கர்பெர்க்கும், இந்த ஆண்டு பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தொழில்நுட்ப சர்ச்சைகள்

இந்த ஆண்டில் நடைபெற்ற பல தொழில்நுட்ப சர்ச்சைகள் மற்றும் பிரச்சனைகளின் காரணமாகத் தான் கூகுள், அமேசான் மற்றும் பேஸ்புக் போன்ற சிஇஓக்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment