9ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த நெல் ஜெயராமன் , 12ஆம் வகுப்பு புத்தகத்தில் பாடமாக மாறியது எப்படி ? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, May 30, 2019

9ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த நெல் ஜெயராமன் , 12ஆம் வகுப்பு புத்தகத்தில் பாடமாக மாறியது எப்படி ?

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் கிராமத்தில் நம்மாழ்வாரின் வாரிசாக இயற்கை விவசாய பண்ணையை உருவாக்கி வந்தவர், நெல் ஜெயராமன். இவர் யானைக்கவுனி, கருங்குருனை உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகளை கண்டறிந்து அதனை விளைவித்து வந்தவர்

ஆண்டுக்கு ஒருமுறை தனது ஆதிரெங்கம் கிராமத்தில் நெல் திருவிழா நடத்தி பலருக்கும் பயிற்சி அளித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார்

உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெல் ஜெயராமன் கடந்தாண்டு டிசம்பர் 6ம் தேதி காலமானார். புகழ்பெற்ற தாவரவியலாளர்களான நார்மன் இ.போர்லாக் மற்றும் எம்எஸ் சுவாமிநாதன் ஆகியோரின் வரிசையில் புத்தகத்தில் நெல் ஜெயராமன் பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது.


 வாழ்நாளையே விவசாயத்துக்காக அர்ப்பணித்த நெல் ஜெயராமன் 9ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் நிலையில், 12ஆம் வகுப்பு புத்தகத்தில் பாடமாக மாறியுள்ளார்
12ம் வகுப்பு தாவரவியல் பாட புத்தகத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் குறித்த தகவல்களை தமிழக அரசு சேர்த்துள்ளது .


பாரம்பரிய நெல் வகைகளை தேடி, அவற்றை காப்பதில் அயராது உழைத்தவர் நெல் ஜெயராமன். இவரது பணியை போற்றும் வகையில், நெல் ஜெயராமன் குறித்த குறிப்பை 12ஆம் வகுப்பு தாவரவியல் பாடப்புத்தகத்தில் வைத்து தமிழக அரசு சிறப்பித்துள்ளது

No comments:

Post a Comment