இன்ஜினியர்களுக்கு அரசு வேலை :டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, May 30, 2019

இன்ஜினியர்களுக்கு அரசு வேலை :டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அறிவிப்பு

அரசு துறைகளில் 424 உதவி இன்ஜினியர் பணியிடம் உள்பட 475 காலியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. வழியாக நிரப்பப்படுகின்றன.


 இந்நிலையில் உதவி இன்ஜினியர் பணிக்கான காலியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.மின் ஆய்வுத்துறை உதவி ஆய்வாளர் 10; வேளாண்மை துறையில் உதவி இன்ஜினியர் 93; நீர்வள ஆதாரத்துறை சிவில் உதவி இன்ஜினியர் 120; பொது பணித்துறை சிவில் உதவி இன்ஜினியர் 73 இடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.


மேலும் பொது பணித்துறை மின் பிரிவு உதவி இன்ஜினியர் 13; நெடுஞ்சாலை துறை உதவி இன்ஜினியர் 123.கடல் வாரிய சிவில் உதவி இன்ஜினியர் 2; தொழிற்துறை பாதுகாப்பு பிரிவு உதவி இயக்குனர் 26 மற்றும் இளநிலை கட்டடவியல் வல்லுனர் 15 காலியிடங்கள் என மொத்தம் 475 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.இதற்கான விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது.


ஜூன் 28 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இந்த பதவிகளுக்கான தேர்வு ஆக. 10 காலை மற்றும் மாலையில் நடக்கிறது. விபரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment