மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் மொத்தம் 281 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 32 மேல்நிலைப் பள்ளிகள், 37 உயர்நிலைப் பள்ளிகள், 93 நடுநிலைப் பள்ளிகள், 119 தொடக்கப் பள்ளிகள் அடங்கும்.
இந்த பள்ளிகளில் மொத்தம் 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயிலும் வகையில் உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. ஆனால் தற்போது 85 ஆயிரம் மாணவ, மாணவிகள் மட்டுமே பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்கையை அதிகரிக்கவும், கல்வித் தரத்தை மேம்படுத்தவும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆணையர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. அதில் கல்வி அலுவலர், கூடுதல் கல்வி அலுவலர், உதவி கல்வி அலுவலர் மற்றும் தலைமையாசிரியர்கள் அடங்கிய வழிகாட்டுதல் குழு அமைத்து செயல்பட வேண்டும் என்று ஆணையர் உத்தரவிட்டார்.
அதன்படி, துணை ஆணையாளர் (கல்வி) குமாரவேல் பாண்டியன், கல்வி அலுவலர் கோவிந்தசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாநகராட்சி பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வீடு வீடாக சென்று பெற்றோர்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, ஒவ்வொரு பள்ளி ஆசிரியரும் அந்த பள்ளியை சுற்றி 1.5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள வீடுகளுக்கு சென்று துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது தொடர்ந்து ஒரு வாரம் நடைபெறும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் மூலம் சென்னை பள்ளகளில் மாணவர் சேர்க்கையை 1 லட்சத்து 30 ஆயிரமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

No comments:
Post a Comment