வாக்குப்பதிவுக்குப் பிறகு அரசு ஊழியர் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, May 16, 2019

வாக்குப்பதிவுக்குப் பிறகு அரசு ஊழியர் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வரும் 19-ஆம் தேதிக்குப் பிறகு வெளியாகவுள்ளது. இடைத் தேர்தல் வாக்குப் பதிவுக்குப் பிறகே வழங்க வேண்டுமென்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவைத் தொடர்ந்து, அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு அடுத்த வாரத்தில் வெளியாகவுள்ளது.



விலைவாசி உயர்வைக் கணக்கில் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி, வழங்கப்பட்டு வருகிறது.



மத்திய அரசு எப்போதெல்லாம் தன் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்குகிறதோ, அப்போதெல்லாம் தமிழக அரசும் அகவிலைப்படியை உயர்த்தி அளிக்கும். ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படியை மூன்று சதவீதம் உயர்த்தி, மத்திய அரசு கடந்த பிப்ரவரி 20-இல் அறிவிப்பு வெளியிட்டது.

தமிழக அரசின் அறிவிப்பு: மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழக அரசும் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.


இதனிடையே, மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகி தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன.இதனால், புதிய அறிவிப்புகள் எதையும் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது.


இந்தச் சூழ்நிலையில், அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடுவது பற்றி தேர்தல் ஆணையத்தின் அனுமதியை தமிழக அரசு கோரியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து, தமிழக அரசுத் துறை வட்டாரங்கள் கூறியது:-
அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை வெளியிடுவது பற்றி தேர்தல் ஆணையம் வழிகாட்டுதலை வழங்கியது.


அதன்படி, நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிவடைந்த பிறகு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை வெளியிடலாம் எனத் தெரிவித்துள்ளது.
இடைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19-இல் நடைபெறவுள்ளது.


இந்தத் தேர்தல் முடிவடைந்த பிறகு, அடுத்த வாரம் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமையில் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வெளியாகக் கூடும். கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படலாம் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment