கேங்மேன்' வேலைக்கு லட்சம் பேர் விண்ணப்பம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, May 16, 2019

கேங்மேன்' வேலைக்கு லட்சம் பேர் விண்ணப்பம்

மின் வாரியத்தில் 'கேங்மேன்' வேலைக்கு இதுவரை ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.தமிழ்நாடு மின் வாரியத்தில் உதவி பொறியாளர், கள உதவியாளர் என 50 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. இதனால் ஒருவரே பல வேலைகளை செய்வதால் பணியில் உள்ள ஊழியர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது.


மின் கம்பம் நடுதல் கேபிள் பதிப்பு உள்ளிட்ட கள பணிகளை மேற்கொள்ள 'கேங்மேன்' என்ற புதிய பதவியில் 5000 ஊழியர்களை நியமிக்க மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் 7ல் வெளியிடப்பட்டது.


இந்த வேலைக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வி தகுதி ஐந்தாம் வகுப்பு.லோக்சபா தேர்தலால் கேங்மேன் வேலைக்கு மின் வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி ஏப்ரல் 24ல் இருந்து துவங்கியது.


 விண்ணப்பிக்க வரும் 30ம் தேதி கடைசி நாள்.இந்நிலையில் இந்த வேலைக்கு விண்ணப்பித்துள்ள நபர்களின் எண்ணிக்கை இதுவரை ஒரு லட்சத்தை எட்டியுள்ளது. கடைசி தேதிக்கு இரு வாரங்களே அவகாசம் உள்ளதால் மூன்று லட்சம் பேர் விண்ணப்பிப்பர் என தெரிகிறது.

No comments:

Post a Comment