பொறியியல் படிப்புகளில் அரியர் இருந்தால் டிகிரி வாங்க ஒரு வாய்ப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, May 28, 2019

பொறியியல் படிப்புகளில் அரியர் இருந்தால் டிகிரி வாங்க ஒரு வாய்ப்பு

மாணவர்களின் நலன் கருதி 2000-ஆம் ஆண்டுக்குப் பின் அரியர் வைத்த முன்னாள் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத அண்ணா பல்கலைக்கழகம் வாய்ப்பு வழங்கி உள்ளது. கடந்த 9-ஆம் தேதி அண்ணா பல்கலைகழகத்தின் சிண்டிகேட் கூட்டம் நடத்தப்பட்டது.

அப்போது  2000ஆம் ஆண்டுக்கு பின் பொறியியல் படிப்புகளில் அரியர் இருப்பதால், பட்டம் வாங்க முடியாமல் இருக்கும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள்  தேர்வு எழுத கடைசி வாய்ப்பு வழங்கப்படலாம் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் குமார்  வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2000ஆம் ஆண்டுக்குப் பின்பு அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் 2001ஆம் ஆண்டுக்கு பிறகு அதன் உறுப்பு கல்லூரிகளில் படித்து, டிகிரி முடிக்க முடியாமல் அரியர் வைத்திருப்பவர்கள் வரும் நவம்பர்- டிசம்பரில் நடக்கும் செமஸ்டர் மற்றும் ஏப்ரல்- மே மாதத்தில் நடக்கும் செமஸ்டரில் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment: