கோடை வெயிலின் தாக்கத்தை பொறுத்து பள்ளிகள் திறக்கும் தேதி பற்றி முடிவு செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தமிழக பள்ளிக்கல்வியில் 10, 11,12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம்நடந்தன. இதர வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் ஏப்ரலில் முடிவடைந்தன.
அதன்பின்னர்மாணவர்களுக்கு ஏப்ரல் 13-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து 50 நாட்கள் விடுப்பு முடிந்து ஜூன் 3-ம் தேதி பள்ளிகளை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது.
அதற்கேற்ப பள்ளி திறக்கும் நாளிலேயே மாணவர்களுக்கு பாடநுால், நோட்டுப் புத்தகம், சீருடை உட்பட அரசின் 14 வகை இலவசப் பொருட்களும் வழங்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
இதற்கிடையே தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், பள்ளிகள் திறக்கும் நாள்இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று பள்ளிக்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் கூறும்போது, ''வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
ஆனால், இந்த ஆண்டு ஜூன் 1, 2-ம் தேதிகள் சனி, ஞாயிறுவிடுமுறை என்பதால் ஜூன் 3-ம்தேதி பள்ளிகள் திறக்கும் சூழல் உள்ளது.
அதற்கு முன்னதாகவே பள்ளிகளில் அனைத்து பணிகளையும் முடித்துவிட அலுவல் சார்ந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
அதேநேரம் பள்ளிகள் திறக்கும் நாள் பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்த பிறகு, வெயில் நிலவரம் குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தப்படும். அதன் பின்னர் பள்ளிகள் திறக்கும் நாள் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்'' என்றார்

No comments:
Post a Comment