குறைவான தேர்ச்சி விகிதத்தைக் கண்டித்து அரசு பள்ளியை இழுத்து மூடிய பெற்றோர் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, May 22, 2019

குறைவான தேர்ச்சி விகிதத்தைக் கண்டித்து அரசு பள்ளியை இழுத்து மூடிய பெற்றோர்

ஹரியாணா அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்ததைக் கண்டித்து அந்த பள்ளியை பெற்றோர் இழுத்து மூடினர்.

ஹரியாணாவின் பதேகாபாத் மாவட்டம், போதிவாலா கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 81 மாணவ, மாணவியர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். கடந்த 17-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் 25 மாணவ, மாணவியர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

இதுதொடர்பாக பள்ளியின் தலைமையாசிரியரிடம் பெற்றோர் விளக்கம் கோரினர். ஆனால் அவர் அலட்சியமாக பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது.


இதைத் தொடர்ந்து பெற்றோரும் பொதுமக்களும் இணைந்து நேற்று பள்ளியின் பிரதான வாயிலை இழுத்து மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்வித் துறை அதிகாரிகளும் போலீஸாரும் விரைந்து வந்து பெற்றோருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பள்ளியின் தலைமையாசிரியரை மாற்ற வேண்டும் என்று பெற்றோர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.


 இதுதொடர்பாக 2 நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

No comments:

Post a Comment