பிஎஸ்என்எல் டெலிகாம் நிறுவனம், தனது ப்ரீபெய்ட் திட்டத்தில் கீழ் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய திட்டம் பிரத்தியேகமாக இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டவருக்கான ஸ்பெஷல் ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அறிவிப்பின் படி, ரூ.389 என்ற விலையில் இந்த ஸ்பெஷல் ப்ரீபெய்ட் திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது. குறுகிய கால சலுகையுடன் இந்த திட்டம் தமிழ்நாடு மற்றும் சென்னை வட்டாரத்திற்கு மற்றும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் இன் ரூ.389 திட்டத்தின் கீழ் பயனர்களுக்குத் தினமும் 1ஜிபி டேட்டா வழங்கப்படும்.
இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்லிங் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ்கள், 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. பயனருக்கு வழங்கப்படும் 1 ஜிபி டேட்டா முடிந்தபின் 40kbps வேகத்தில் டேட்டா வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
அதேபோல் பிஎஸ்என்எல் தமிழகம் மற்றும் சென்னையில் ரூ.56 திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி பயனர்களுக்குத் தினமும் 1.5ஜிபி டேட்டா 14 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. குறைந்த நாட்கள் வேலிடிட்டியுடன் அதிக டேட்டா பயனர்களுக்கு இது வழங்குகிறது
அதேபோல் பிஎஸ்என்எல் முன்பு வழங்கி வந்த ரூ.198 ப்ரீபெய்ட் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த 1.5 ஜிபி டேட்டா தற்பொழுது 2ஜிபி டேட்டாவாக மாற்றப்பட்டுள்ளது மற்றும் இதன் வேலிடிட்டி 28 நாட்களிலிருந்து 56 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment