அரசு பேருந்தில் பயணிகளுக்காக ஆர்ஓ வாட்டர் வாங்கி வைக்கும் டிரைவர், கண்டக்டர் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, May 30, 2019

அரசு பேருந்தில் பயணிகளுக்காக ஆர்ஓ வாட்டர் வாங்கி வைக்கும் டிரைவர், கண்டக்டர்

சிதம்பரத்தில் இருந்து பழனிக்கு செல்லும் அரசு பேருந்தில் பயணிகளுக்காக தங்களது சொந்த செலவில் ஆர்ஓ வாட்டரை டிரைவர், கண்டக்டர்கள் வாங்கி வைத்து வருகின்றனர்.


 இவர்களது செயலை பயணிகள் பாராட்டி வருகின்றனர். சிதம்பரத்தில் இருந்து தினம்தோறும் மாலை 4 மணியளவில் கும்பகோணம் கோட்ட அரசு பேருந்து புறப்படுகிறது. இந்த பேருந்து இரவு 7 மணிக்கு கும்பகோணம் வந்து பழனிக்கு நள்ளிரவு 1 மணிக்கு செல்லும்.


பின்னர் அங்கு சில மணி நேரம் ஓய்வுக்கு பிறகு மீண்டும் புறப்பட்டு மதியம் 12 மணியளவில் தஞ்சைக்கு வந்து பின்னர் சிதம்பரத்துக்கு செல்கிறது.

இந்நிலையில் சிதம்பரத்தில் இருந்து புறப்படும் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை, திருச்சி, திண்டுக்கல் வழியாக செல்லும்போது ஆங்காங்கே உள்ள பேருந்து நிலையங்களில் சுகாதாரமான குடிநீர் இல்லாமல் பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.


மேலும் திருச்சி, திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் குடிநீரை பயணிகள் கேட்டால் பணம் கொடுத்து குளிர்பானங்கள் வாங்கி குடியுங்கள் என்று கடைக்காரர்கள் கூறுகின்றனர். இதனால் தண்ணீர் பாட்டில்களை அதிக விலை கொடுத்து வாங்கி குடிக்கும் நிலை உருவாகிறது.


இதுபோன்ற நீண்ட தூரம் செல்லும் பேருந்தில் வருபவர்கள் 90 சதவீதம் பேர் பழனி கோயிலுக்கு வரும் அடித்தட்டு மக்களாக இருப்பதால் அவர்களால் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி குடிக்க முடியாத நிலையும், பேருந்து நிலையத்தில் வரும் தரமற்ற குடிநீரை குடிக்கும் நிலையும் ஏற்படுகிறது. இதனால் அவர்களுக்கு பல்வேறு உடல் கோளாறுகள், உபாதைகள ஏற்படுகிறது.


இதை கருத்தில் கொண்டு கடந்த 6 ஆண்டுகளாக சிதம்பரத்தில் இருந்து வரும் கும்பகோணம் கோட்ட பேருந்தில் செல்லும் டிரைவர், கண்டக்டர்கள் தங்களது சொந்த செலவில் கேனில் ஆர்ஓ வாட்டரை வாங்கி பேருந்தின் முன்புறம் வைத்துள்ளனர்.

தற்போது கோடை காலத்தில் அதிகளவில் தண்ணீர் தாகம் வரும். அப்போது இந்த பேருந்தில் வைத்துள்ள ஆர்ஓ குடிநீரை பயணிகள் குடித்து வருகின்றனர்.


இதுபோல் அனைத்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் தொலைதூர பேருந்துகளிலும் தரமான ஆர்ஓ குடிநீரை வாங்கி வைக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 இதுகுறித்து பேருந்து டிரைவர் சிவசுப்பிரமணியன் கூறுகையில், சிதம்பரத்தில் இருந்து பழனிக்கு 9 மணி நேரம் பயணமாகும். இதனால் பயணிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.

 பயணிகள் நிலைமையை கருத்தில் கொண்டு நானும், கண்டக்டரும் சேர்ந்து ரூ.30 கொடுத்து வண்டி மாற்றும்போது குடிநீர் கேன்
 வாங்கி வைத்து விடுவோம்.

இதேபோல் அடுத்து வரும் டிரைவர், கண்டக்டரும் கேனில் ஆர்ஓ வாட்டர் வாங்கி வைத்து விடுவர். இதுபோல் வேறு எந்த அரசு பேருந்துகளிலும் கிடையாது. பயணிகளின் தாகம் தணிக்க நாங்கள் வாங்கி வைத்துள்ள தண்ணீரை குடிக்கும்போது அவர்களின் மனம் குளிரும்.எங்களை வாழ்த்துவார்கள். இதை பயணிகள் பயன்படுத்தும்போது எங்களுக்கும் நிம்மதி ஏற்படும் என்றார்.

No comments:

Post a Comment