தேசிய உரத்தொழிற்சாலையில் மேலாண்மை பயிற்சி பணி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, May 30, 2019

தேசிய உரத்தொழிற்சாலையில் மேலாண்மை பயிற்சி பணி

தேசிய உரத் தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள மேலாண்மை பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 44

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Management Trainee(HR)

காலியிடங்கள்: 19

தகுதி: Personnel Management, Industrial Relations, Human Resource Management, HR போன்ற துறைகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் எம்பிஏ அல்லது முதுகலை டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Management Trainee (Marketing)

காலியிடங்கள்: 25

சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000

வயதுவரம்பு: 20 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: விவசாயத்துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஎஸ்சி அல்லது எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும் அல்லது விவசாயத்துறையில் பி.எஸ்சி பட்டம் முடித்து சந்தையியல், விவசாய சந்தையியல், உலக சந்தையியல், கிராமப்புற மேலாண்மை பாடப்பிரிவில் எம்பிஏ அல்லது பிஜிடிபிஎம் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் ஆன்லைன் எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.700. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.nationalfertilizers.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.06.2019

No comments:

Post a Comment