சென்னை மெட்ரோவில் 40 ஆயிரம் சம்பளத்தில் வேலை ! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, May 30, 2019

சென்னை மெட்ரோவில் 40 ஆயிரம் சம்பளத்தில் வேலை !

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில், பொறியியல் பட்டதாரிகளுக்கு ஊக்கதொகையுடன் கூடிய சென்னை ஐஐடியில் ஒரு வருட சான்றிதழ் படிப்பும் அத்துடன் அந்நிறுவனத்தில் 5 வருடம் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் இன்ஜினியரிங் முடித்த பட்டதாரிகள், நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
சான்றிதழ் படிப்பு:
PG Diploma Course - Metro Rail Technology and Management

காலியிடங்கள்:
சிவில் - 16
மெக்கானிக்கல் - 1
எலக்ட்ரிக்கல் - 5
எலக்ட்ரானிக்ஸ் - 3

மொத்தம்= 25 காலியிடங்கள்

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 30.05.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.06.2019
சான்றிதழ் படிப்பு தொடங்கும் காலம்: ஜூலை - 2019

வயது வரம்பு:
29.05.2019 அன்றுக்குள், அதிகபட்சமாக 28 வயது டையவராக இருத்தல் வேண்டும்

விண்ணப்பக் கட்டணம்:
பொது / ஓபிசி பிரிவினர் - ரூ.500
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் - ரூ.100

குறிப்பு:
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பக் கட்டணம் செலுத்த முடியும்.

கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில், பொறியியல் பட்டப்படிப்பில் சிவில் / மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் / எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன் இன்ஜினியரிங் போன்ற ஏதேனும் ஒரு துறையில் பயின்று முதல் வகுப்பில் தேர்ச்சி அதாவதுகுறைந்தபட்சமாக 70% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

முக்கிய குறிப்புகள்:
1. விண்ணப்பதாரர்கள் கேட் (GATE) தேர்வில் தகுந்த மதிப்பெண்கள் பெற்றிருத்தல் அவசியம்.
2. கடைசி வருடம் பொறியியல் பயிலும் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://chennaimetrorail.org/ - என்ற இணையதள முகவரியில் சென்றும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:
1. கேட் (GATE) தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
2. மருத்துவத் தகுதி தேர்வு

சான்றிதழ் படிப்பிற்கான காலம்: ஒரு வருடம்

சலுகைகள்:
1. தேர்வு செய்யப்படுவோர்க்கு, மாத ஊக்கத்தொகையாக ரூ.20,000, நல்கையுடன்கூடிய
கல்விக்கட்டணமும் வழங்கப்படும்.

2. சான்றிதழ் படிப்பில் சேர வருவதற்கான பயணக்கட்டணமும் வழங்கப்படும்.

3. வெற்றிகரமாக சான்றிதழ் படிப்பு முடித்த தேர்வர்கள், குறைந்தபட்சம் 85% அல்லது அதற்கு மேல் பெற்று தேர்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியுடன் ரூ.40,000 மாதச் சம்பளமும் வழங்கப்படும்.

மேலும், இது குறித்த முழுத் தகவல்களைப் பெற, https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/CMRL-HR-03-2019.pdf - என்ற இணையதள முகவரியில்
சென்று அறிந்து கொள்ளலாம்

No comments:

Post a Comment