தென்னக ரயில்வேயில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, May 30, 2019

தென்னக ரயில்வேயில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

தென்னக ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 142 ஜூனியர் பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது


இதற்கு பொறியியல் துறையில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 142

பணி: இளநிலை பொறியாளர்/பி.வே
காலியிடங்கள்: 84
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ அல்லது பி.எஸ்சி (சிவில்) பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

பணி: இளநிலை பொறியாளர்/ டிஎம்ஓ
காலியிடங்கள்: 58
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், உற்பத்தி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேஷன் மற்றும் கண்ட்ரோல் போன்ற ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ அல்லது பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினர் 47க்குள்ளும், ஓபிசி பிரிவினர் 45க்குள்ளும், பொது பிரிவினர் - 42 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://rrcmas.in/downloads/gdce-je-tmo-pway-for-sr-application.pdf என்ற லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முகவரி: " The Chairman, Railway Recruitment Cell, No.5, Dr.P.V.Cherian Cresent Road, Behind Ethiraj College, Egmore, Chennai - 600 008."

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://rrcmas.in/downloads/gdce-je-tmo-pway-for-sr-notification.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.06.2019

No comments:

Post a Comment