சென்னை உயர்நீதிமன்றத்தில் உதவியாளர் வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, May 20, 2019

சென்னை உயர்நீதிமன்றத்தில் உதவியாளர் வேலை

சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடி தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள 180 ரெசிடென்சியல் அசிஸ்டெண்ட்(வீட்டு உதவியாளர்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Residential Assistant (வீட்டு உதவியாளர்)

காலியிடங்கள்: 180

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2001 தேதியின்படி பொது பிரிவினர் 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மற்ற அனைத்து பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

 பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரினர் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

 எழுத்துத் தேர்வு, செய்முறை தேர்வுகள் மற்றும் வாய்மொழி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பதிவாளர்களின் வீடுகளில் பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

 https://www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.mhc.tn.gov.in/recruitment/docs/not_84_2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.06.2019

No comments:

Post a Comment