ட்ரூ காலர்' டேட்டாஸ் விற்பனை - அதிர்ச்சி தகவல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, May 23, 2019

ட்ரூ காலர்' டேட்டாஸ் விற்பனை - அதிர்ச்சி தகவல்

ட்ரூ காலர்' (True Caller) எனும் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் பயன்பாட்டாளர்களின் தகவல் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களில் 60% முதல் 70% வரையிலான மக்கள் 'ட்ரூ காலர்' (True Caller) எனும் அப்ளிகேஷனை பயன்படுத்தி வருகின்றனர். ஆரம்பத்தில் உங்களுக்கு போன் செய்யும் நபர் யார் ? என்பதை தெரிந்துகொள்ளும் நோக்கில் இந்த அப்ளிகேஷன் கொண்டு வரப்பட்டது. பின்னர் மக்கள் இதற்கு அளித்த ஆதரவை கண்ட 'ட்ரூ காலர்' நிறுவனம், மேலும் சில அப்டேட்களை செய்தது.

 அதன்படி, பணப்பரிவர்த்தனை செய்யும் வசதியையும் 'ட்ரூ காலர்' அறிமுகப்படுத்தியது

இதன்மூலம் பல லட்சம் பேர் பணப்பரிவர்த்தனை செய்து வருகின்றனர்

இந்நிலையில் பெயர் அறிய முடியாத சில சைபர் செக்யூரிட்டி கண்காணிப்பளர்கள் 'ட்ரூ காலர்' நடைபெறும் பணப் பரிவர்த்தனைகள் கவனித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

 அத்துடன் அதிக அளவில் பணப்பரிவர்த்தனை செய்யும் நபர்களின் தொலைபேசி எண், இ-மெயில் ஐடி மற்றும் தனிப்பட்ட தகவல்களை சமூக வலைத்தள மோசடிக் கும்பல்களிடமும், இணையதள பிரோக்கர்களிடமும் விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்தத் தகவல்கள் ரூ.1.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதே சமயம் இந்தத் தகவல்களை 'ட்ரூ காலர்' நிறுவனம் மறுத்துள்ளது.

 தங்கள் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் எதுவும் ஹேக்கர்களால் திருடப்படவில்லை என்றும், அவை யாருக்கு விற்பனை செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலும், பணப்பரிவர்த்தனை செய்யும் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக உறுதியாக கூறியுள்ளது.

No comments:

Post a Comment