430 ஏழை மாணவர்களின் கல்விக்கடனை(278 கோடி) ஏற்றுக்கொண்ட தொழிலதிபர் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, May 23, 2019

430 ஏழை மாணவர்களின் கல்விக்கடனை(278 கோடி) ஏற்றுக்கொண்ட தொழிலதிபர்

கவுரவ டாக்டர் பட்டம் வாங்க வந்த தொழிலதிபர் ஒருவர்,இந்த ஆண்டு பட்டம் பெறும் மாணவர்கள் அத்தனை பேருடைய கல்விக் கடனையும் தனது குடும்பமே வங்கிகளுக்கு செலுத்தும் என்று சொல்லி அமெரிக்காவையே ஆனந்தக் கண்ணீர் சிந்த வைத்திருக்கிறார்

அமெரிக்காவின் அட்லான்டா நகரில் மோர்பிரர்ஸ் என்ற பெயரில் ஒரு கல்லூரி இயங்குகிறது.அது அமெரிக்க கருப்பின மாணவர்களின் கல்விக்காக 135 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது.பல லட்சம் ஆஃப்ரோ அமெரிக்க மாணவர்கள் படித்து பட்டம் பெற்ற கல்லூரி இது.கருப்பின மக்களின் விடுதலைக்கு உழைத்த மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் கூட இந்த கல்லூரியின் மாணவர்தான்.

முதலீட்டாளரும்,தொழிலதிபரும் கொடையாளியுமான ராபர்ட் எஃப் ஸ்மித் என்பவருக்கு நேற்று நடந்த 135 வது பட்டமளிப்பு விழாவில் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.அப்போது பேசிய ராபர் ஸ்மித், உங்கள் வாழ்க்கை என்கிற பஸ்ஸுக்கு நாங்கள் கொஞ்சம் எரிபொருள் போட்டு அனுப்புகிறோம்.அதாவது,இந்த ஆண்டு பட்டம் பெற்றும் 430 மாணவர்களின் கல்விக் கடனான 40 மில்லியன் டாலரை ( இந்திய பணத்தில் 278 கோடி ) உங்கள் சார்பாக நாங்களே வங்கிக்கு செலுத்துவோம் என்று அறிவித்தார்.

இதைக்கேட்ட மாணவர்களும்,அவர்களுடைய பெற்றோரும் சில விநாடிகள் அயர்ந்து,பிறகு எழுந்து நின்று கண்ணீர் மல்க நீண்ட நேரம் கைதட்டினர்.
இதுபற்றி ,அந்த மாணவர்களில் ஒருவரான ஆரோன் மிட்சம் கூறும்போது' எனக்கு 2 லட்சம் டாலர் கல்விக் கடன் இருக்கிறது.அதை திருப்பிக் கட்ட நான் 25 ஆண்டுகள் சிக்கன வாழ்க்கை வாழ்ந்திருக்க வேண்டி இருக்கும்' என்கிறார்.

கல்வி கடன் மாணவர்களுக்கு ,விலங்காகி விடுகிறது.அதைக் கட்ட வேண்டும் என்பதால் அவர்கள் கிடைத்த வேலையை செய்து கொடுக்கிற சம்பளத்தை வாங்கிக் கொண்டு வாழ நேர்ந்துவிடுகிறது.ராபர்ட் ஸ்மித் இன்று 430 மாணவர்களுக்கு பெரும் விடுதலை அளித்திருக்கிறார்.

1 comment:

  1. இதைப்போல நமது நாட்டில் நடந்தால் சந்தோஷம்...

    ReplyDelete