பிஎச்.டி. கட்டுரைகளின் தரம்: ஆய்வு நடத்த யுஜிசி முடிவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, May 22, 2019

பிஎச்.டி. கட்டுரைகளின் தரம்: ஆய்வு நடத்த யுஜிசி முடிவு

இந்திய பல்கலைக்கழகங்களில் கடந்த 10 ஆண்டுகளாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆராய்ச்சி (பிஎச்.டி.) கட்டுரைகளின் தரம் குறித்து ஆய்வு நடத்த பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) முடிவு செய்துள்ளது.


ஆராய்ச்சித் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட உள்ள இந்த ஆய்வானது, மத்தியப் பல்கலைக்கழகங்கள், மாநில அரசு பல்கலைக்கழகங்களில் மட்டுமின்றி தனியார் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் நடத்தப்பட உள்ளது.


யுஜிசி தேர்வு செய்யும் தனியார் அமைப்பு மூலம், 6 மாத காலங்களில் இந்த ஆய்வு நடத்தி முடிக்கப்பட உள்ளது.

 இந்த முடிவுகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில், ஆராய்ச்சித் தரத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என யுஜிசி அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment