மாமல்லபுரம் மீனவர் குப்பத்தில் கடற்கரையில் சாதாரண சிமெண்ட் தரையில் சறுக்கி விளையாடிய சிறுமியின் வாழ்க்கை குறும்படம், ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் மீனவ குப்பம் பகுதியை சேர்ந்தவர் சுகந்தி. இவரது மகள் கமலி (10). தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவருக்கு, சறுக்கு விளையாட்டில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. இதையறிந்த, அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் சிலர் கடற்கரையோரம் உள்ள மீனவப்பகுதியில் அம்மன் கோயில் அருகே சறுக்கு விளையாட்டு பயிற்சி பெறுவதற்காக, சிறிய அளவில் சிமெண்டினால் கட்டப்பட்ட சறுக்கு விளையாட்டு மையம் ஒன்றை அமைத்தனர்.
இதில், சிறுமி கமலி சறுக்கு விளையாடி பயிற்சி பெற்று வந்தார். சிமெண்ட் தரையிலான சறுக்கு மைதானத்தில் சர்வ சாதாரணமாக சிறுமி சறுக்கு விளையாடிதை பார்த்து, மாமல்லபுரம் வந்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆச்சரியமடைந்தனர்.
இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்த ஸ்கேட்டிங் வீரர் ஜேமி தாமஸ் என்பவர், சிறுமியின் சறுக்கு விளையாட்டை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டார். இந்த வீடியோ காட்சி, சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இதுதொடர்பாக, 'இந்து தமிழ்' நாளிதழ் கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி கமலி குறித்து செய்தி வெளியிட்டது.
இதையடுத்து சிறுமியின் சறுக்கு விளையாட்டு உலகம் முழுவதும் பரவியது.
இதைத்தொடர்ந்து, நியூசிலாந்து நாட்டை சேர்ந்த ஷாஷா ரெயின்போ என்பவர், மாமல்லபுரத்துக்கு நேரில் வந்து சிறுமி மற்றும் அவரது தாயை சந்தித்துப் பேசினார். மேலும், கமலியில் வாழ்க்கைச் சூழலை 'கமலி' என்ற பெயரில் ஆவணக் குறும்படமாகத் தயாரித்தார்.
இந்த குறும்படம், மும்பை மற்றும் அட்லாண்டாவில் நடைபெற்ற சர்வதேச குறும்படம் மற்றும் திரைப்பட விழாக்களில் 'சிறந்த குறும்பட இயக்குநர்' விருதைப் பெற்றது.
இந்நிலையில், சிறுமியின் வாழ்க்கைச் சூழல் மற்றும் அவரது சறுக்கு விளையாட்டு ஆர்வத்தை விவரிக்கும் குறும்படம், ஆஸ்கர் விருது பெறுவதற்கான போட்டிக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதனால், சர்வதேச அளவில் பிரபலமடைந்துள்ள மாமல்லபுரம் மீனவச் சிறுமி கமலிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

No comments:
Post a Comment