தொலைதூர கல்வியில் சேர வாய்ப்பு: அண்ணாமலை பல்கலை அழைப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, May 19, 2019

தொலைதூர கல்வியில் சேர வாய்ப்பு: அண்ணாமலை பல்கலை அழைப்பு

அண்ணாமலை பல்கலை தொலைதுார கல்வி இயக்ககம் திருப்பூர் கல்வி மையத்தில், நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப வினியோகம் துவங்கியுள்ளது.

இது குறித்து, திருப்பூர் கல்வி மைய அதிகாரி (பொறுப்பு) அருள் அரசு வெளியிட்ட அறிக்கை:

இளங்கலை படிப்பில், பி.ஏ,., - பி.காம்., - பி.எஸ்சி., - பி.பி.ஏ, முதுகலை படிப்பில், எம்.ஏ., எம்.காம்., எம்.எஸ்சி., எம்.பி.ஏ., மற்றும் சட்டத்துறை, மருத்துவத்துறை, கல்வித்துறை, நுாலகத்துறை, யோகத்துறை, இசைத்துறை, கணினித்துறை, ஜோதிடவியல் உள்ளிட்ட சான்றிதழ், பட்டயம், உயர்நிலை பட்டய படிப்புகள் உள்ளன.ஜி.எஸ்.டி., தொடர்பான படிப்புகளுக்கும் நேரடி மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.


பிற கல்லுாரிகள் மற்றும் அண்ணாமலை பல்கலை பயிலும் மாணவர்கள், 50 சதவீத கல்வி கட்டண சலுகையுடன் குறிப்பிட்ட சான்றிதழ் மற்றும் பட்டயப்படிப்புகளில் சேர்ந்து பயன்பெறலாம்.

 விரும்புவோர், 0421 2211888 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment