ஒன்பிளஸ் 7 ப்ரோ வாங்கினால் 4 சலுகைகள்: ஜியோ அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, May 19, 2019

ஒன்பிளஸ் 7 ப்ரோ வாங்கினால் 4 சலுகைகள்: ஜியோ அறிவிப்பு

ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட் போனை
ரிலையன்ஸ் கடைகளில் வாங்கினால் நான்கு கூடுதல் சலுகைகளைப் பெறலாம்.

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னனி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் தொழில்நுட்ப பிரியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த மொபைல் HDR 10+ ஃபுல் ஹெச்டி வீடியோ ஒளிபரப்பைக் கொண்டது. இந்த மொபைல் தற்போது ரிரையன்ஸ் டிஜிட்டல் மற்றும் மை ஜியோ ஸ்டோர்களில் கிடைக்கிறது.

இந்தக் கடைகளுக்குச் சென்று ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு பிரத்சேய சலுகைகள் வழங்கப்படுகின்றன.
 ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.48,999 முதல் விற்பனைக்கு உள்ளன.

எஸ்பிஐ கார்டு மூலம் வாங்கும்போது 2000 ரூபாய் கேஷ்பேக், ரூ.9,300 மதிப்பிலான இதர பலன்கள் மற்றும் 70% எக்ஸ்சேஞ் மதிப்புக்கான உத்தரவாதம் ஆகியவற்றைப் பெறலாம்.

ரிலையன்ஸ் கடைகள் மூலம் ஒன்பிளஸ் 7 ப்ரோ மொபைல் வாங்கும் முதல் 150 பேருக்கு ரூ.1,490 மதிப்பிலான ஹெட்போன் இலவசமாகத் தரப்படுகிறது.
ரிலையன்ஸ் டிஜிட்டல் பற்றிய மேலும் தகவல்களை அறிய, https://www.facebook.com/reliancedigital/ என்ற பக்கத்த்துக்குச் செல்லலாம்.

ஒன்பிளஸ் 7 ப்ரோவில் உள்ள அடிப்படை சிறப்பம்சங்கள்:

டிஸ்ப்ளே: 6.7 இன்ச்
ஆபரேட்டிங் சிஸ்டம்: ஆண்ட்ராய்டு 9.0 பை
குவால்காம் ஸ்நாப்டிராகன் 855 SoC
ரேம்: 6 ஜிபி
மெமரி: 128 ஜிபி
பின்புறத்தில் ட்ரிப்பிள் கேமரா:
48MP + 8MP + 16MP
முன்புற கேமரா: பாப் அப் செல்பி கேமரா 1400x3120 பிக்சல்
பேட்டரி சக்தி: 4000mAh
சார்ஜ்: 30W அதிவேக சார்ஜ்ர்

No comments:

Post a Comment