அன்று செல்ஃபி எடுக்க முடியாமல் தவித்தவர்; இன்று அவரையே வென்றார் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, May 25, 2019

அன்று செல்ஃபி எடுக்க முடியாமல் தவித்தவர்; இன்று அவரையே வென்றார்

ஒரு காலத்தில் காங்கிரஸ் எம்பி ஜோதிராதித்யாவுடன் செல்ஃபி எடுக்க முயன்று தோற்றுப்போனவர், இன்று தேர்தலில் அவரையே வென்றுள்ளார்.

கிருஷ்ணபால் என்பவர் சில வருடங்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியில் நிர்வாகியாக இருந்தார்.

அந்தச் சமயத்தில் ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸ் கட்சியின் முக்கிய புள்ளிகளுள் ஒருவராகவும், மத்திய மின்சக்தி துறை அமைச்சராகவும் இருந்தார்.

 அந்தக் காலகட்டத்தில் கட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த ஜோதிராதித்யாவுடன் கிருஷ்ணபால் செல்ஃபி எடுக்க முயன்றார். ஆனால் அவர் செல்ஃபி எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை.

 இதனால் காரில் சென்ற ஜோதிராதித்யாவுடன் சற்று தொலைவில் நின்று கிருஷ்ணபால் செல்ஃபி எடுத்தார்

பின்னர் இடைத்தேர்தல் ஒன்றில் உட்கட்சிப் பூசலால் கிருஷ்ணபால் முற்றிலும் புறக்கணிப்பட்டார்.

 இதனால் காங்கிரசிலிருந்து வெளியேறிய அவர், பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அங்கு படிப்படியாக கட்சி பொறுப்புகளை பெற்றார்.

 இந்நிலையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், மத்திய பிரதேசத்தின் குனா மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிராதித்யாவை எதிர்த்து பாஜக வேட்பாளர் கிருஷ்ணபால் களமிறக்கப்பட்டார்.

இந்தத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், கிருஷ்ணபால் 1.25 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

 இதனால் காலம் அனைவருக்கும் பாடத்தை கற்றுக்கொடுக்கம் என பலரும் கிருஷ்ணபால் செல்ஃபி எடுக்க முயன்று தோற்றுப்போன புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

No comments:

Post a Comment