இனி வாட்ஸ்ஆப் செயலியில் விளம்பரங்கள்: பேஸ்புக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, May 25, 2019

இனி வாட்ஸ்ஆப் செயலியில் விளம்பரங்கள்: பேஸ்புக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

பேஸ்புக் நிறுவனம் சார்பில் இப்போது புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது, அது என்னவென்றால் வாட்ஸ்ஆப் செயலியில் விளம்பரங்களை வழங்க இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.

 இந்த செய்தி பலருக்கும் வருத்தத்தை அளிக்கும் வகையில்தான் உள்ளது.

ஏற்கனவே பலமுறை வாட்ஸ்ஆப் செயலியில் விளம்பரங்களை கொண்டுவருவதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில் இன்று பேஸ்புக் நிறுவனம் தனது குறுந்தகவல் செயலியில் விளம்பரங்களை வழங்குவது பற்றி முதல் முறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2020-ம் ஆண்டு முதல்..

2020-ம் ஆண்டு முதல் வாட்ஸ்ஆப் செயலியில் விளம்பரங்கள் தோன்றும் என பேஸ்புக் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

இதுபற்றிய அறிவிப்பு நெதர்லாந்தில் நடைபெற்ற பேஸ்புக் வருடாந்திர விளம்பர பொதுக்கூட்டத்தில் வெளியாகி இருக்கிறது.

மேலும் வாட்ஸ் செயலியில் எங்கு விளம்பரங்கள் தோன்றும் என்ற விவரங்கள் ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.

புதிய அம்சம்

குறிப்பாக டிவிட்டரில் வெளிவந்துள்ள தகவலின் அடிப்படையில் பேஸ்புக் தனது வாடிக்கையாளர்கள் வியாபாரங்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என நினைக்கிறது.

இந்த புதிய அம்சம் வாட்ஸ்ஆப்பில் கிளிக் செய்யப்படும் விளம்பரங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.


வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் பகுதியில்
இந்நிறுவனத்தின் இரண்டாவது திட்டம் இன்ஸ்டாகிராம் சார்ந்து ஆகும், அதன்படி வாட்ஸ்ஆப் (ஐ.ஜி) கிளிக் செய்யப்படும்
விளம்பரங்கள் என குறிப்பிடப்படுகிறது.

 மூன்றாவது திட்டத்தில் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் பகுதியில் விளம்பரங்களை தோன்ற செய்வது ஆகும், இது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் விளம்பரங்களை தோன்றுவதை போன்று செயல்படும் என்று தெரவிக்கப்பட்டுள்ளது

ஆனால் இந்த திட்டம் 2020-ம் ஆண்டு துவகத்தில் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது பேஸ்புக் நிறுவனம். குறிப்பாக வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் செயலியில் அதிகளவு ரிச்சர் ஃபார்மேட்களை புகுத்த பேஸ்புக் திட்டமிட்டுள்ளது. அதேசமயம்
விளம்பரங்களுடன், வியாபர ரீதியில் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ளும் தளமாக வாட்ஸ்ஆப் இருக்கும்.

No comments:

Post a Comment