ஒவ்வொரு மாதமும் வழிபட வேண்டிய பைரவர்கள் மற்றும் நன்மைகள். - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, May 25, 2019

ஒவ்வொரு மாதமும் வழிபட வேண்டிய பைரவர்கள் மற்றும் நன்மைகள்.

தமிழ் கடவுள்களில் ஒன்றான பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளில் ஒன்றாகும். பைரவரின் வாகனமாக நாய் உள்ளது. ஆதலால் நாய்களை பைரவர் என்றும் சொல்கின்றார்கள்.

பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் அழைக்கின்றார்கள்.

 அனைத்து செல்வ செழிப்புடன் வாழவும், எதிரிகள் தொல்லை விலகவும், பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைவது பைரவர் வழிபாடாகும்.

தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவரை நாம் வணங்கும்போது நம்முடைய அனைத்து இன்னல்களும் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பது ஐதீகம்.

பைரவருக்கு நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு வழிபாட்டிற்கும் தனித்தன்மை வாய்ந்த பலன்கள் கிடைக்கும்.

எந்த மாதத்தில் எந்த பைரவரை வணங்கினால் சிறப்பு என்பதை பார்க்கலாம்.

எந்த மாதத்தில் எந்த பைரவரை வணங்கலாம் :

சித்திரை - சண்ட பைரவர்

வைகாசி - ருரு பைரவர்

ஆனி - உன்மத்த பைரவர்

ஆடி - கபால பைரவர்

ஆவணி - சொர்ணாகர்ஷண பைரவர்

புரட்டாசி - வடுக பைரவர்

ஐப்பசி - சேத்ரபால பைரவர்

கார்த்திகை - பைரவர்

மார்கழி - அசிதாங்க பைரவர்

தை - குரோதன பைரவர்

மாசி - சம்ஹார பைரவர்

பங்குனி - சட்டநாத பைரவர்

பைரவரை வணங்குவதால் ஏற்படும் நன்மைகள் :

பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர். தன்னை நாடி வரும் பக்தர்களின் பாவத்தை போக்குபவர். பைரவரை வழிபட்டால் தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறைவேறும்.

தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி பைரவரை வழிபட்டால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் உண்டாகும்.

சனி மற்றும் ராகு, கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு விபூதி அபிஷேகம் செய்வது நல்லது.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் ஆறு மாதங்கள் தொடர்ந்து தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு செவ்வரளி மாலை சாத்தி வழிபட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

No comments:

Post a Comment