மீன்வளப் பல்கலை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பக் காலம் நீட்டிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, May 31, 2019

மீன்வளப் பல்கலை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பக் காலம் நீட்டிப்பு

நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பக் காலம் ஜூன் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுக. பெலிக்ஸ் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள் மே 31-ஆம் தேதி என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் காலம் ஜூன் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment