பிரதமர் மோடி தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பில், இணையமைச்சராக பிரதாப் சந்திர சாரங்கி (64) பதவியேற்க மேடை ஏறியபோது கரகோஷம் விண்ணை முட்டும் அளவுக்கு எழுந்தது,
அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஆனால், அவரைப் பற்றி முழுமையாக அறிந்தவர்களுக்கு அது வியப்பளிக்கும் விஷயமாக இருந்திருக்காது. ஏனெனில், அந்த கரகோஷம் அவரது எளிமைக்கும், நேர்மைக்கும் கிடைத்த அங்கீகாரம்.
ஏனெனில், இந்த காலத்தில் இப்படி ஓர் அரசியல்வாதி இருக்கிறாரா? என்று எண்ணி வியக்கும் அளவுக்கு எளிய மனிதர் அவர்.
ஒடிஸாவைச் சேர்ந்த சாரங்கி, இப்போது வரை குடிசை வீட்டில்தான் வசித்து வருகிறார் என்பது நம்பமுடியாத உண்மை. கடலோர ஒடிஸாவில் தனது சமூக சேவைகள் மூலம் பிரபலமான அவர், ஒடிஸாவின் மோடி என்று அப்பகுதி மக்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் நீண்டகால உறுப்பினரான அவர், பிரதமர் மோடியின் நம்பிக்கைக்குரியவர். ஒடிஸா மாநில உள்ளூர் அரசியல் நிலவரங்களை சாரங்கி மூலமே பிரதமர் மோடி உறுதிப்படுத்திக் கொள்வார் என்று சாரங்கியின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
ஒடிஸாவில் இருமுறை எம்எல்ஏவாக பதவி வகித்துள்ள சாரங்கி, சைக்கிளில் சென்று மக்களைச் சந்திப்பதையே இப்போது வரை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
வீட்டுக்கு அருகேயுள்ள தெருக்குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டு வந்து குளிப்பதே அவரது அன்றாட வழக்கம். திருமணம் செய்து கொள்ளாத சாரங்கி, தனது தங்கை, அவரது கணவர் மற்றும் அவர்களது குழந்தைகளுடன் எளிய குடிசை வீட்டில் வசிக்கிறார்.
கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் பாலாசோர் தொகுதியில் போட்டியிட்ட அவர் வெற்றி பெறவில்லை. எனினும், இதே தொகுதியில் இந்தத் தேர்தலில் மீண்டும் சாரங்கி பாஜக சார்பில் களமிறங்கினார்.
பிஜு ஜனதா தளம், மற்றும் காங்கிரஸ் சார்பில் பாலாசோரில் போட்டியிட்ட இருவருமே கோடீஸ்வரர்கள். எனினும், பாலாசோர் மக்கள் இந்த முறை சாரங்கியை கைவிடவில்லை. 12,959 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார்.
இதன் மூலம் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்முறையிலேயே அவருக்கு குறு, சிறு, நடுத்தர தொழில் துறை, கால்நடைப் பராமரிப்பு, பால் வளம் மற்றும் மீன் வளத்துறை இணையமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அவரது மக்கள் சேவைக்கு முழு அங்கீகாரம் கிடைத்துள்ளதுடன், அவர் தனது பணியில் கூடுதல் முனைப்புடன் செயல்படவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இரு முறை எம்எல்ஏவாக இருந்தபோதும் தனது சம்பளத்தில் பெரும் பகுதியை ஏழை, எளிய மக்களுக்காகவே செலவிட்டு வந்தார். எனவேதான் அவரால் தனது வீட்டைக் கூட புதுப்பித்துக் கட்ட முடியவில்லை என்று அவர் வசித்து வரும் கோபிநாத்பூர் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment