கதை சொல்லி குழந்தைகளை ஊக்குவிக்கும் ஆசிரியர்: மாணவர் சேர்க்கைக்காக புதுமையான பிரச்சாரம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, May 26, 2019

கதை சொல்லி குழந்தைகளை ஊக்குவிக்கும் ஆசிரியர்: மாணவர் சேர்க்கைக்காக புதுமையான பிரச்சாரம்

கோடை விடுமுறை விட்டதும் குழந்தைகளைப் பெற்றோர்கள் தங்கள் உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள். வீட்டி லிருந்தால் இந்த அக்னி வெயிலில் வெளியே போகாமல் டிவி அல்லது செல்போனில் வீடியோ கேம் விளையாடுகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில் மதுரை காமராசர் சாலையில் உள்ள டாக்டர் டி. திருஞானம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் க.சரவணன் குழந்தைகளைத் தேடிச் சென்று கதைகள் சொல்லி, புத்தகங்கள் வழங்கி வாசிக்க வைக்கிறார்.

குழந்தைகளை அவர்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ள நூலகத்துக்கு அழைத்துச் சென்று புத்தகங்களை அறிமுகப்படுத்து கிறார். நேற்று காலை தனது பள்ளி ஆசிரியர்கள் உஷா தேவி, கீதா, ஓம் சக்தி, வெங்கட லெட்சுமி ஆகியோரை அழைத்துக் கொண்டு கீழ அனுப்பானடி பகுதி யில் உள்ள குழந்தைகளை அவர் களின் வீட்டில் இருந்து அழைத்து தெய்வக்கனி தெருவில் உள்ள வேப்ப மர நிழலில் கூடச் செய்தார்.

பத்துக் குழந்தைகள் சேர்ந்தவு டன் தலைமையாசிரியர் க.சர வணன் விளையாட்டுகள் சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கிறார். இதைப் பார்க்கும் பக்கத்து வீடுகளைச் சேர்ந்த குழந்தைகளும் வந்து சேர்ந்துகொள்கின்றனர்.

குழந்தைகள் உற்சாகம் அடைந்தவுடன் அரை வட்டத்தில் அமரச் செய்கிறார். தான் படித்த கதை சொல்லட்டுமா எனக் கதைகளை அபிநயத்துடன், கதைக்குள் குழந்தைகளையும் இணைத்து, கதைகள் வழியாக கேள்விகளை எழுப்பி, குழந்தை களைச் சிந்தித்து பதிலளிக்க வைக்கிறார்.

அதைத் தொடர்ந்து தான் படித்த கதை இந்த புத்தகத்தில் உள்ளது எனக் கூறி புத்தகங்களை அறிமுகப்படுத்தி ஒவ்வொரு குழந்தைகளுக்கும் வாசிக்க புத்தகம் வழங்குகிறார். குழந்தைகள் அவருடன் இணைந்து வாசிக்க துணை செய்கிறார். குழந்தைகள் வாசித்த கதைகளை அவர்களிடம் இருந்து கேட்கிறார்.

பின்னர் ஆசிரியர் சரவணன், மற்ற ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் கற்றலில் செய்துள்ள புதுமைகளைப் பெற்றொரிடம் எடுத்துக் கூறுகின்றனர். தமிழ் வழிக் கற்றலில் சேர்க்க விரும்பும் பெற்றோர் தங்கள் பள்ளியை நாடலாம் எனக் கூறி விரும்பும் குழந்தைகளைத் தங்கள் பள்ளியில் சேர்க்கிறார். இப்படி புதுமையான முறையில் மாணவர் சேர்க்கை நடத்தும் தலைமை ஆசிரியரை அப்பகுதி மக்கள் ஆச்சரியமாகப் பார்க்கின்றனர்.

இது குறித்து க.சரவணனிடம் கேட்ட போது, " குழந்தைகளைத் தேடிச் சென்று கதை சொல்வது புதுமையான அனுபவம். சென்ற காலாண்டு விடுமுறையில் இருந்து இதனைச் சோதனை ரீதியாக குழந்தைகளை இணைத்து கதைகள் கூறி, வாசிக்க புத்தகங்கள் வழங்கி, அப்பகுதி நூலகத்தை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தினேன்.

ஆரம்பத்தில் சில இடங்களில் எந்த அமைப்பு, எந்த மதம் எனக் கேட்டு சிலர் தகராறு செய்தனர். அதன்பின் எனது நோக்கத்தை அறிந்துகொண்டனர். அரையாண்டு விடுமுறையில் பல இடங்களுக்குச் சென்று கதை கூறி விளையாட வைத்து நூலகத்தை அறிமுகப்படுத்தினேன்.

அப்போது பள்ளித் தலைவர் சுரேந்திரனும் , சில ஆசிரியர்களும் உடன் வந்து உதவினர். இதன் மூலம் கதை சொல்லும் பகுதியில் எனது ஆசிரியர்கள் எளிதில் மாணவர் சேர்க்கையில் ஈடுபடுகின்றனர், " என்றார்.

No comments:

Post a Comment