தபால் ஊழியர்கள் அலட்சியத்தால் படிப்பை இழந்த இளைஞர் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, May 26, 2019

தபால் ஊழியர்கள் அலட்சியத்தால் படிப்பை இழந்த இளைஞர்

விருதுநகரில் தபால் ஊழியர்களின் அலட்சியத்தால் மாணவர் ஒருவரது கல்லூரி படிப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வீரசோழன் பகுதியில் உள்ள பாதானக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மாணவர் முனிய ராஜாஜி. இவர் 12ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பித்துள்ளார்.

மே 16ஆம் தேதி கலந்தாய்வில் பங்கேற்க வருமாறு, அவருக்கு பல்கலைக்கழகத்திலிருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

 அந்தக் கடிதமோ மே 22ஆம் தேதிதான் முனியராஜாஜிக்கு கிடைத்துள்ளது. இதனால், கலந்தாய்வில் அவரால் பங்கேற்க முடியவில்லை.

இதுகுறித்து தபால் நிலையத்தில் கேட்டதற்கு, 4 ஊழியர்கள் விடுப்பில் இருந்ததால் தாமதமாகிவிட்டதாக கூறியுள்ளனர்.

அலட்சியமாக செயல்பட்ட தபால்நிலைய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் கருணையுடன் தனக்கு மற்றுமொரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும் முனியராஜாஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

 இதுதொடர்பாக அருப்புக்கோட்டை தபால் நிலைய உதவி கண்காணிப்பாளர் ஜெயராமிடம் கேட்டதற்கு, விசாரணைக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment