தமிழகத்தில் பாஜக தோல்வி ஏன்? ரஜினிகாந்த் பேட்டி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, May 28, 2019

தமிழகத்தில் பாஜக தோல்வி ஏன்? ரஜினிகாந்த் பேட்டி

தமிழகத்தில் ஓரிடத்தில் கூட பாஜ வெற்றி பெறாததற்கு மோடி எதிர்ப்பு அலையே காரணம் என நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.சென்னை  போயஸ்கார்டனிலுள்ள அவரது வீட்டுக்கு வெளியே நடிகர் ரஜினிகாந்த்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.


 அப்போது அவர் கூறியதாவது:நம்  நாட்டில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒரு வசீகர தலைவர்கள்  இருந்திருக்கிறார்கள். நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி உள்ளிட்ட  தலைவர்கள் பெரும் வெற்றி பெற்றனர்.


 இப்போது அதுபோன்ற வசீகர தலைவராக மோடி  இருக்கிறார்.  மத்தியில் பாஜ ஆட்சி அமைக்க மோடி என்ற தனிநபர்தான் காரணம்.  அதே சமயம், தமிழகத்தில் பாஜ தோல்வி அடைந்ததற்கு மோடி எதிர்ப்பு அலைதான்  காரணம்.


நீட் தேர்வு, 8 வழிச்சாலை திட்டம், மீத்தேன் திட்டம் உள்ளிட்ட  மக்களுக்கு  எதிரான நடவடிக்கைகளால் பாஜ இங்கு தோற்றுள்ளது. அலை வரும்போது அதை எதிர்த்து ஜெயிக்க முடியாது. அலையோடுதான் சென்றாக வேண்டும்.

தமிழகத்துக்கு  இப்போது உடனடி தேவை, தண்ணீர் பிரச்னையை போக்குவதுதான். மோடி அரசு அதை சரிவர  செய்யும் என நம்புகிறேன். காவிரி, கோதாவரி திட்டத்தின் மூலம் குடிநீர்  பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும்.


பிரதமராக மோடி  பதவியேற்கும் விழாவில் நான் பங்கேற்கிறேன். கட்சி துவங்கி 14 மாதங்களிலேயே  கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கணிசமான ஓட்டுகளை வாங்கியுள்ளது.  அவருக்கு எனது வாழ்த்துகள். காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கான  காரணம் கேட்கிறீர்கள்.


 அங்கு மூத்த தலைவர்கள் பலர் உள்ளனர். அதே சமயம்,  இளைஞர்களின் மனநிலையை புரிந்துகொண்டு அதன்படி செயல்படவும் கடுமையான உழைப்பு  செலுத்தவும்  தவறியிருப்பதாக கருதுகிறேன்.


காங்கிரஸ் தலைவர் பதவியில்  இருந்து ராகுல் காந்தி விலக கூடாது. அவர் முழு பொறுப்பையும் ஏற்று, வலுவாக  கட்சியை பலப்படுத்த வேண்டும். எதிர்க்கட்சி வலுவாக இருந்தால்தான்  ஆளும்கட்சியும்  சிறப்பாக செயல்பட முடியும்.


எனது அரசியல் பிரவேசம் பற்றிய கேள்விகளுக்கு  ஏற்கனவே பலமுறை பதில் கூறிவிட்டேன்.இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்

No comments:

Post a Comment