சென்னையில் முதல்முறையாக ஏசி மின்சார ரயில் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, May 21, 2019

சென்னையில் முதல்முறையாக ஏசி மின்சார ரயில்

தமிழகத்தில் முதல்முறையாக ஏசியுடன் கூடிய மின்சார ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் சென்னை கடற்கரை முதல் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு வரை பயணிக்கின்றனர். பணிக்கு செல்வோர் மற்றும் பல்வேறு தரப்பினரும் பயணிப்பதால் தினமும் இந்த ரயில் தடம் கூட்டமாகவே காணப்படுகிறது.

இதனால் இந்த வழித்தடை மேம்படுத்த தெற்கு ரயில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக்கொண்டே வருகிறது. இந்நிலையில் மும்பையை போன்று சென்னை முதல் செங்கல்பட்டு வரை ஏசி மின்சார ரயிலை இயக்க திட்டமிட்டு ரயில்வேதுறை, அதற்கான பணிகளை செய்து வருகிறது.

தமிழகத்தில் மின்சார ரயிலில் ஏசி வசதியுடன் கூடிய சேவை அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

தற்போது இருக்கும் ரயில்களில் ஏசி வசதி கொண்ட வகுப்புகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தைவிட சற்று அதிகமாக ஏசி மின்சார ரயிலில் வசூலிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

 சென்னையில் மக்கள் தொகை பெருக்கத்தால் மக்களிடம் இந்த ரயில் சேவை வரவேற்பை பெரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 சென்னையில் மெட்ரோ ரயில் சேவை கொண்டுவரப்பட்ட போது, ஆரம்பத்தில் பெரும் வரவேற்பு இல்லையென்றாலும் தற்போது அதிக பயணிகள் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment