ஓட்டுக்களில் வித்தியாசம் எங்கேயோ இடிக்குதே! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, May 24, 2019

ஓட்டுக்களில் வித்தியாசம் எங்கேயோ இடிக்குதே!

விருதுநகரில் நேற்று முன் தினம் லோக்சபா, சாத்துார் சட்டசபை தேர்தல் ஓட்டுஎண்ணிக்கை நடந்து முடிந்தது.

லோக்., வேட்பாளர் சாத்துார் சட்டசபைதொகுதியில் பெற்ற ஓட்டிலும், சட்டசபை தொகுதி வேட்பாளர் பெற்ற ஓட்டிலும் வித்தியாசம் தென்படுவதில் பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் வலுக்கிறது.

 விருதுநகர் லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் காங்., சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் சாத்துார் சட்டசபை தொகுதியில் 83,075, அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., அழகர்சாமி 63,411 ஓட்டுகள் பெற்றிருந்தனர்.

ஆனால் சாத்துார்சட்டசபை இடை தேர்தலில் தி.மு.க.,வேட்பாளர் சீனிவாசன் 76,521, அ.தி.மு.க., வேட்பாளர் ராஜவர்மன் 76,977 ஓட்டுகள் பெற்றிருந்தனர்

சாத்துார் சட்டசபையில் 1,82,908 ஓட்டுகள் எண்ணப்பட்டதில், லோக்சபா தேர்தலில் சாத்துாரில் 1,81,596 ஓட்டுகள் எண்ணப்பட்டுள்ளன. ஒரே நாளில் ஒரே ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் நடந்தும் ஒன்றுக்கொன்று வித்தியாசத்தை தருகிறது.


இதன் சட்டசபைதொகுதியில் அ.தி.மு.க., கூட்டணியில் விருதுநகர் லோக்சபா தே.மு.தி.க., வேட்பாளர் அழகர்சாமி பெற்றதை விட ராஜவர்மன் அதிக ஓட்டுகள் பெற்றதும். தி.மு.க.,கூட்டணி வேட்பாளர் மாணிக்கம் தாகூரை விட தி.மு.க., சீனிவாசன் குறைவான ஓட்டுகள் பெற்றதும் பொதுமக்கள், அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை கிளப்பி உள்ளது.

No comments:

Post a Comment