வடசென்னையில் அனைவரும், 'டிபாசிட்' காலி ஏன்? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, May 24, 2019

வடசென்னையில் அனைவரும், 'டிபாசிட்' காலி ஏன்?

வடசென்னை லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,வின் அழகாபுரம் மோகன்ராஜ்; தி.மு.க.,வின், கலாநிதி வீராசாமி; அ.ம.மு.க.,வின் சந்தான கிருஷ்ணன்; மக்கள் நீதி மையத்தின் மவுரியா; நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் என, 23 பேர் போட்டியிட்டனர்.

மொத்தம், 9 லட்சத்து, 55 ஆயிரத்து, 931 ஓட்டுகள் பதிவாகின. கலாநிதி வீராசாமி, 5 லட்சத்து, 90 ஆயிரத்து, 986 ஓட்டுகள் பெற்றார்.அழகாபுரம் மோகன்ராஜ், 1 லட்சத்து, 29, ஆயிரத்து, 468 ஓட்டு; மவுரியா, 1 லட்சத்து, 3,167 ஓட்டு பெற்றனர். காளியம்மாள், 60, ஆயிரத்து, 515; சந்தான கிருஷ்ணன், 33, ஆயிரத்து, 277 ஓட்டு பெற்றனர்.

இதில், 4 லட்சத்து, 61 ஆயிரத்து, 518 ஓட்டுகள் வித்தியாசத்தில், கலாநிதி வெற்றி பெற்றார்

அவரை எதிர்த்து போட்டியிட்ட, 22 பேரும், 'டிபாசிட்' இழந்தனர்.

தி.மு.க.,விற்கு பிரதான போட்டியாக, தே.மு.தி.க., இருந்தது. ஆனால், அக்கட்சி வேட்பாளர், அழகாபுரம் மோகன்ராஜ், துவக்கம் முதலே, தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டவில்லை.

தேர்தல் வேலை செய்ய முன் வந்த, அ.தி.மு.க.,வினரையும், அவர் ஒதுக்கியதால், அனைவரும் மோகன்ராஜை புறக்கணித்தனர்.பணமும் செலவு செய்யாததால், பெரும்பாலானஓட்டுச்சாவடியில், முகவர் கூட நியமிக்கப்படவில்லை.

 அ.தி.மு.க., நிர்வாகிகளிடம், அவர் நடந்து கொண்ட மோசமான அணுகுமுறையால், அ.தி.மு.க.,வினரே அவருக்கு ஓட்டு போடவில்லை


.இந்த தொகுதியில், அ.தி.மு.க., போட்டியிட்டு இருந்தால், தி.மு.க.,வின் வெற்றி வித்தியாசம் குறைந்திருக்குமே தவிர, பாதித்திருக்காது.

தி.மு.க.,வில் கோஷ்டி பூசல்கள் இருந்தும், அதை சமாளித்து, நிர்வாகிகளை ஒருங்கிணைந்து, அரவணைத்து சென்றதால், தி.மு.க.,வினர் ஓட்டு சிதறாமல் பார்த்துக் கொண்டனர்.அ.ம.மு.க., வேட்பாளர், சந்தானகிருஷ்ணன் புதிய முகம்; தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர். இவரது பரிசுபெட்டி சின்னம், வடசென்னை மக்களிடம் சென்றடையவில்லை.

இரவு, பகலாக பிரசாரம் செய்து,, இவரால், ஓட்டுகளை பெற முடியவில்லை. காளியம்மாளை விட, குறைவான ஓட்டுகளை பெற்றுள்ளார்.

அ.தி.மு.க., - - தி.மு.க., விற்கு மாற்றாக ஓட்டு போட வேண்டுமென என எண்ணிய, வடசென்னை இளைஞர்கள் பெரும்பாலானோர், மக்கள் நீதி மையம் வேட்பாளருக்கு ஓட்டளித்து உள்ளனர். இதனால், மவுரியா, ஒரு லட்சத்திற்கும் மேலான ஓட்டுகளை பெற்றுள்ளார்

No comments:

Post a Comment