மழை ஒரு பக்கம் கைவிரித்ததால், நிலத்தடி நீரே கானல் நீராகிப் போன நிலையில், தண்ணீர் லாரிகள் மட்டுமே சென்னை மக்களின் தாகங்களை தீர்த்து வந்தது.
இறைவனைத் தேடும் ஜீவ ஆத்மாக்களைப் போல தண்ணீர் லாரிகளைக் கண்டாலே மனம் குளிரும் நிலைக்குத் தள்ளப்பட்டனர் சென்னைவாசிகள்.
இந்த நிலையில்தான் அதற்கும் குந்தகம் வந்துவிட்டது. நிலத்தடி நீரை எடுக்க முறையான அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே 27-ஆம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த போராட்டத்தினால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இயங்கி வரும் சுமார் 4,500 தண்ணீர் லாரிகளின் சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே ஒரு வாரத்துக்கு ஒரு முறை (சில இடங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறை) மட்டுமே தண்ணீர் லாரிகளில் தண்ணீர் பிடித்து வைத்துக் கொண்டு சொட்டு சொட்டாகப் பயன்படுத்தும் குடும்பங்கள் இந்த வேலை நிறுத்தத்தால் பரிதவிப்புக்கு உள்ளாகப் போகிறது.
பொதுமக்களோடு சேர்ந்து, தண்ணீர் லாரிகள் மூலம் அடிப்படைத் தேவைக்கும் சேர்த்து தண்ணீர் பெறும் ஐடி நிறுவனங்கள், ஹோட்டல்கள், விடுதிகள், மருத்துவமனைகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
தனியார் இடங்களிலும், விவசாயக் கிணறுகளிலும் இருந்து தண்ணீர் எடுப்பதற்கு உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சில நிபந்தனைகளை தமிழக அரசு விதித்தது. இதனால், பாதிக்கப்படுவதாகக் கூறி தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், வரும் 27-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அச்சங்கத்தினர் கூறியது: நிலத்தடி நீரை எடுக்க முறையான அனுமதி அளிக்க வேண்டும். தண்ணீர் லாரிகளுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
இத்தொழில் ஈடுபட்டுள்ளவர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தனி வாரியம் அமைக்க தமிழக அரசு முன் வர வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகளை வலியுறுத்தி 27-ஆம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றனர்.
ஏற்கனவே அத்தியாவசியத் தேவைகளுக்கும் தண்ணீர் லாரிகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சென்னை உள்ளிட்ட மாவட்ட மக்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் எந்த அளவுக்கு பாதிக்கப்படுவார்கள் என்பதை சொல்லில் வர்ணிக்க முடியாது.

No comments:
Post a Comment