சூர்யாவின் என்.ஜி.கே படைத்த முதல் சாதனை! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, May 26, 2019

சூர்யாவின் என்.ஜி.கே படைத்த முதல் சாதனை!

இதற்கான வியாபாரம் முடிந்துவிட்ட நிலையில் தற்போது இந்தப் படம் தென்கொரியாவிலும் ரிலீஸாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள படம் என்.ஜி.கே. இந்தப் படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருக்கிறார். படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர்.

நந்த கோபாலன் குமரன் (சுருக்கமாக என்.ஜி.கே.) என்ற இந்தப் படத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கிறார். கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கிய இந்தப் படம் 2018-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவரும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

ஆனால், சில காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. இதனால் படத்தை ரிலீஸ் செய்வது தாமதமானது. சூர்யா - செல்வராகவன் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது. படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் மே 31-ம் தேதி படம் திரைக்கு வருகிறது.

இதற்கான வியாபாரம் முடிந்துவிட்ட நிலையில் தற்போது இந்தப் படம் தென்கொரியாவிலும் ரிலீஸாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தென்கொரியாவில் வெளியாகும் முதல் தமிழ்ப்படம் என்ற சாதனையை என்.ஜி.கே நிகழ்த்தியுள்ளது.

No comments:

Post a Comment