வேளாண் படிப்புக்கான தகுதித்தேர்வு நாளை வரை பிழை திருத்தலாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, May 18, 2019

வேளாண் படிப்புக்கான தகுதித்தேர்வு நாளை வரை பிழை திருத்தலாம்

வேளாண் படிப்புக்கான அகில இந்திய நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், பிழைகளை திருத்த வழங்கிய அவகாசம் நாளையுடன் நிறைவு பெறுகிறது.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் சார்பில், கடந்தாண்டு வரை, இந்நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. நடப்பாண்டு முதல், தேசிய நுழைவுத்தேர்வு ஒருங்கிணைப்பு ஆணையமான என்.டி.ஏ.,விடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்., முதல் மே, 8 வரை விண்ணப்பம் சமர்ப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. வரும், ஜூலை, 1ம் தேதி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தில் உள்ள பிழைகளை திருத்த வழங்கிய அவகாசம், நாளை நிறைவுபெறுகிறது. குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டணம் செலுத்தி, விண்ணப்பம் சமர்ப்பித்தவர்களுக்கு மட்டுமே பிழை திருத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 பெரும்பாலான மாணவர்கள், புகைப்படம் மற்றும் கையெழுத்து பதிவில் தவறு, குளறுபடி செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. பிழைகளை, ntaicar.nic.in என்ற இணையதள முகவரி மூலம் திருத்திக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment