சுகாதாரத் துறையில், தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற, மருத்துவ துறையில் புதிய கருத்துகளை தெரிவிக்க, அனைத்து மருத்துவக் கல்லுாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மருத்துவ துறையில், தமிழகம் முன்னணியில் இருந்து வருகிறது.
தாய், சேய் மரணம் தடுப்பு, தொற்றா நோய் தடுப்பு, உடல் உறுப்பு தானம் ஆகியவற்றில், தமிழகம் முதலிடத்தில் இருந்து வருகிறது.இந்நிலையில், சுகாதார துறையில், நாட்டின் முதன்மை மாநிலமாக, தமிழகத்தை மாற்ற, பல்வேறு முயற்சிகளை சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது.
சுகாதார துறையை முன்னேற்ற தேவையான புதிய கருத்துகளை தெரிவிக்க, அனைத்து மருத்துவக் கல்லுாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது:சுகாதாரத் துறையில், முன்னேற்றங்களை ஏற்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
. இதற்காக, நோயாளிகளுடன் அதிகளவு தொடர்பு வைத்துள்ள டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ மாணவர்களின் கருத்துகளை கேட்டு, அதனடிப்படையில் செயல்படும் போது, பல புதிய திட்டங்கள் ஏற்படுத்தப்படும்.
இது குறித்து, மருத்துவக் கல்லுாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்லுாரியில் இருந்து வழங்கப்படும் கருத்துகளை ஆய்வு செய்து, அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்

No comments:
Post a Comment