பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 07.06.19 - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, June 6, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 07.06.19

அதிகாரம்:ஒப்புரவறிதல்

திருக்குறள்:212

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.

விளக்கம்:

ஒருவர் முயன்று சம்பாதித்த பொருள் எல்லாம், உழைக்க முடியாமல் பொருள் தேவைப்படுவோர்க்கு உதவுவதற்கே பயன்பட வேண்டும்.

பழமொழி

Drawn wells seldom dry

இறைக்கிற ஊற்றே சுரக்கும்.

இரண்டொழுக்க பண்புகள்

1. இந்த பு‌திய வருடம் எனக்கு கடவுளால் கொடுக்க பட்ட கொடை

2. எனவே எனது ஒழுக்கம், படிப்பு, பண்பாடு, கீழ்படிதல், இயற்கை வளங்கள் பேணுதல் மற்றும் எனது திறமைகள் மூலம் நான் பயிலும் பள்ளிக்கும் எனது நாட்டிற்கும் பெருமை தேடித் தருவேன்.

பொன்மொழி

பண்பு தான் உடலுக்குப் பொலிவூட்டும், அறிவுக்கு ஒளியூட்டும், ஆற்றலுக்கு துணைநிற்கும், புகழுக்கு வழிக்காட்டும்.

  __முனைவர். சேயோன்

 பொது அறிவு
 ஜூன் 8 - உலக பெருங்கடல் தினம்

'கடல் தங்கம்' என அழைக்கப்படுவது எது?

சுறா மீன்

2.'கடல் விவசாயம்' எனப்படுவது எத்தொழில்?

இறால் பண்ணை அமைத்தல்

English words & meanings

Calf - baby cow, கன்று குட்டி, கெண்டைக் கால்

Candy - sugar coated sweet, மிட்டாய்

ஆரோக்ய வாழ்வு

நாவல் பழச்சாற்றை தினமும் 3 வேளை தவறாமல்  உட்காெண்டு வந்தால்  நீரிழிவுநாேயாளியின் சர்க்கரை அளவு 15 நாள்களில்  10%  குறையும். 3  மாதத்திற்குள் முற்றிலும்   கட்டுப்படுத்திவிடலாம்.

Some important  abbreviations for students

IFSC - Indian Financial System Code

 MICR - Magnetic Ink Character Recognition

பாரம்பரிய விளையாட்டுகள்: "பல்லாங்குழி"

பல்லாங்குழி விளையாடுவதன் நன்மைகள்:

1. கூர்ந்து கவனித்தல் திறன் வளர்கிறது.

2.எண்ணுதல் செயல் எளிதாகிறது.

3.கணிதத்தில் மடங்குகள், கூட்டல், கழித்தல், பெருக்கல் திறன்கள் வளர்கின்றன.

எதிரில் விளையாடுபவரின் பலத்தை கணித்து, விளையாட்டை நகர்த்திச் செல்லும் திறன் வளர்கிறது.

5. பகிர்தல் திறன் வளர்கிறது.

இன்றைய கதை*

*கைமேல் பலன் கிடைத்தது*

 அரசன் ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவனாக இருந்தான். அரண்மணை ஜோதிடர் இந்த நம்பிக்கை மேல் குளிர்க்காய்ந்து கொண்டிருந்தார். ஒரு நாள் ஜோதிடர் அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் நாள் சிறக்கும் என்றார்.

 மன்னன் சேவகனை அழைத்து காலையில் எங்கேயாவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் சொல் என்று கட்டளையிட்டான். சேவகன் தினமும் பொழுது விடியும் முன்பே தெருவிற்கு சென்றுவிடுவான்.

 ஒரு நாள் அரண்மனைக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் கண்டான். அடடா! நல்ல சகுனம், இன்று மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வு கொடுப்பார் என்று மகிழ்ச்சியுடன் மன்னரிடம் சென்று விபரம் சொன்னான். இதைக் கேட்ட மன்னன் சேவகனுடன் அந்த இடத்திற்கு சென்றான். அதற்குள் ஒரு காக்கை போய்விட்டது. மன்னனுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. தளபதியை அழைத்து இந்தப் பொறுப்பற்ற சேவகனுக்குப் பத்து கசையடி கொடு என்று உத்தரவிட்டான்.

சேவகன் சிரிக்க ஆரம்பித்தான். மன்னனுக்கு கோபம் அதிகமானது. ஏன் சிரிக்கிறாய் என்று சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடி என்று உறுமினான். சேவகன் சொன்னான். மகா மன்னரே! இன்று நான் மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பலன் கிடைத்து விட்டது அல்லவா? என்றான். மன்னருக்கு அப்போதுதான் சகுனம் பார்ப்பது தவறு என்று உரைத்தது.

இன்றைய செய்திகள்

07.06.2019

* தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் விதமாக தமிழகத்தில் 24 மணிநேரமும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

* புதிய கல்வி கொள்கை குறித்து விவாதிக்க 22-ல் ஆலோசனை கூட்டம்: மாநில கல்வி அமைச்சர்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அழைப்பு.

* முதல் முறையாக கப்பலில் இருந்து விண்வெளிக்கு ராக்கெட்டை ஏவி சாதனை படைத்தது சீனா.

* உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான் அணியை 34 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி.

* புவனேஸ்வரில்  துவங்க இருக்கும் ஹாக்கி சீரிஸ்  பைனல்ஸ் தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் பட்சத்தில், டோக்கியோ ஒலிம்பிக் (2020) தகுதிச் சுற்றுக்கு தகுதி பெறலாம்.

Today's Headlines

🌸Government of Tamil Nadu has issued a permit to open 24 hrs stores in Tamil Nadu for shops and businesses to increase employment .

 🌸 Advisory Meeting in 22 to discuss new education  policy: Ministry of HRD calls for state education ministers.

 🌸China has invented a rocket launcher for the first time  to  launch from ship to space.

 🌸 World Cup Cricket: Sri Lanka beat Afghanistan by 34 runs



No comments:

Post a Comment