விஷயம் தெரியுமா? தேசிய அளவில் சாதனை படைத்த தமிழக கல்வி துறை.! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, June 7, 2019

விஷயம் தெரியுமா? தேசிய அளவில் சாதனை படைத்த தமிழக கல்வி துறை.!

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை கல்வி தொலைக்காட்சியை தொடங்க இருக்கின்றது.

இந்த கல்வி ஆண்டு துவங்குவதற்கு முன்பு இருந்தே பல்வேறு திட்டங்களை அறிவித்து இருந்தார் செங்கோட்டையன். குறித்த காலத்திலேயே பள்ளியை திறந்து, மாணவர்களுக்கு சீருடையில் மாற்றம் கொண்டு வந்தார்.

பின்னர், பள்ளி ஆரம்பிக்கும் முதல் நாளே, புத்தகங்களும் வழங்கப்பட்டது.  பள்ளி ஆரம்பித்த முதல் நாளே பல பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தற்போது, இலவசமாக தமிழகம் முழுதும், 412 மையங்களில் 5 ஆயிரம் பேருக்கு நீட் தேர்வு பயிற்சி வகுப்பு எடுக்கப்படுகிறது.

பல மாநிலங்களில் ஒவ்வொரு மாணவரும், நீட் தேர்விற்கு பல லட்சங்களை செலவழிக்கும் நிலை உள்ளது. மத்திய அரசின் நீட் தேர்வை எதிர்கொள்ள மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டங்களை அமல்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 8 மாதங்களில் பாடத்திட்டத்தை மாற்றியமைத்து சாதனை படுத்தியுள்ளது. ஆனால், மத்திய அரசுக்கு சி.பி.எஸ்.இ. பாடத்திடங்களை மாற்ற 2 ஆண்டுகாலம் அவகாசம் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை கல்வி தொலைக்காட்சியை தொடங்க இருக்கின்றது. 7 ஆயிரம் பள்ளிக்கூடங்களில் ஜூலை மாதம் இறுதிக்குள் வகுப்பறைகள் கணினிமயமாக்கப்படுகிறது. அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளது. இவ்வாறு தமிழக கல்வி துறையில் தமிழக கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கல்வி துறையில் புதிய புதிய திட்டங்களை கொண்டு வந்து அசத்தி கொண்டிருக்கிறார்.

No comments:

Post a Comment