கால் டாக்சிக்களுக்கு மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு.! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, June 7, 2019

கால் டாக்சிக்களுக்கு மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு.!

கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வரும் வாகன பயன்பாட்டினால் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஆகிய பல பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றது. இதன் காரணமாக எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டை நோக்கி இந்தியா தற்போது பயணிக்க ஆரம்பித்துள்ளது.

அதன்படி மத்திய அரசு 2026 ஆம் ஆண்டுக்குள் ஓலா மற்றும் உபர் போன்ற டாக்ஸி நிறுவனங்கள் தங்களது வாகனங்களில் 40% வாகனங்களை எலக்ட்ரிக் வாகனங்கள் ஆக மாற்ற வேண்டும் என உத்தரவு போட்டுள்ளது. பிரதமர் மோடி நிதி ஆயோக் குழு இது தொடர்பாக பல்வேறு அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றது.

, மேலும் டெல்லியில் எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டை கட்டாயமாக பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சைனாவில் எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டில் தான் அதிவேகமாக முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். அங்கு டாக்சி நிறுவனங்களுக்கு எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டிற்காக ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.

இந்தியாவிலுள்ள பேருந்துகளை எலக்ட்ரிக் மயமாக்குவதற்கான ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் 2030ம் ஆண்டுக்குள் வாகனங்கள் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்தையும் எலக்ட்ரிகல் மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment