போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் வசூலிக்க புதிய இ-சலான் இயந்திரம் அறிமுகம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, June 7, 2019

போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் வசூலிக்க புதிய இ-சலான் இயந்திரம் அறிமுகம்

போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் வசூலிக்க அதி நவீன வசதிகள் கொண்ட புதிய இ- சலான் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டுவோர், சாலை விதிகளை மீறுவோருக்கு ஸ்பாட் ஃபைன் விதிக்கும் முறையை மாற்றி, பணமற்ற, இ-சலான் முறை கடந்த 2018 மே மாதம் சென்னை போக்குவரத்துக் காவல்துறையால் அறிமுகம் செய்யப்பட்டது. லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்கக் கொண்டு வரப்பட்ட இந்த நடைமுறையில், அபராதத் தொகையை பொதுமக்கள் டெபிட்/கிரெடிட் கார்ட், பேடிஎம் அல்லது எஸ்பிஐ ஆன்லைன் அல்லது இ-சேவை மையங்கள் மூலமாக செலுத்த வழிவகை செய்யப்பட்டது.

இந்த நடைமுறை மக்கள் வரவேற்பதாகவும், அபராதம் செலுத்திய 90 சதவீதம் பேர், பணமற்ற முறையில் அபராதம் செலுத்த தாமாக முன்வந்ததாக போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் இ- சலான் இயந்திரத்தை அதி நவீன வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள், போக்குவரத்து காவல் அதிகாரிகள் பயன்படுத்தக் கூடிய GCTP citizen service என்ற கைபேசி செயலியை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று தொடங்கி வைத்தார்.

சென்னையில் விதிமீறலில் ஈடுபடுவோர் இந்தியாவில் எந்த மாநிலத்திற்கு சென்றாலும் சிக்கிவிடுவார் என்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். மேலும் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக GCTP citizen service செயலி மூலம் யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம் என்று கூறினார்.

No comments:

Post a Comment